மீர்வாய்ஸ் ஃபாரூக் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவா பாசிஸ்டுகள்
http://koothanallurmuslims.blogspot.com/2010/11/blog-post_9566.html
ஹுர்ரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவரான மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக்கிற்கு எதிராக பா.ஜ.கவின் பாசிச மாணவர் குண்டர் படையான ஏ.பி.வி.பி அவருடைய வாகனத்தின் மீது அழுகிய முட்டையை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது. இதுத் தொடர்பாக 25 பேரை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.
ஹிந்துத்துவா பாசிஸ்டுகள் மீர்வாய்ஸ் ஃபாரூக்கின் மீது சண்டிகர் கருத்தரங்கு அரங்கில் வைத்து தாக்குதல் நடத்தியதற்கு பின்னர் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கஷ்மீர் பிரச்சனை தொடர்பான கருத்தரங்கில் கலந்துக் கொண்டு மீர்வாய்ஸ் வெளியே வரும் வேளையில் இத்தாக்குதல் நடந்துள்ளது. பாதுகாப்பு படையினர் மீர்வாய்ஸ் ஃபாரூக்கை பாசிஸ்டுகளின் தாக்குதலிருந்து பாதுகாத்தனர்.
கடந்த வியாழக்கிழமை சண்டிகரில் மீர்வாய்ஸ் ஃபாரூக்குடன் இன்னொரு ஹுர்ரியத் தலைவரான பிலால் லோனும் தாக்கப்பட்டிருந்தார்.
கருத்தரங்கில், கஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதலாமா? என கேள்வி எழுப்பிய முன்னாள் ராணுவ தளபதி சங்கர்ராய் சவுத்திரிக்கு பதிலளித்த மீர்வாய்ஸ் இல்லை என பதிலளித்தார். கஷ்மீரின் முக்கிய பிரச்சனை வளர்ச்சியோ, வேலைவாய்ப்போ அல்ல மாறாக சுதந்திரத்திற்கான உணர்வாகும். அரசு சமாதானத்தை விரும்புமானால் இப்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும்.
அருந்ததிராய் தவறாக ஒன்றும் பேசிவிடவில்லை. அவருக்கெதிராக வழக்கு தொடராதீர்கள். இவ்வாறு மீர்வாய்ஸ் ஃபாரூக் தெரிவித்தார்.
KOOTHANALLUR WEBSITE