பேராசிரியர் அனஸ் பதவிப் பிரமாணம் செய்ய நீதிமன்றம் அனுமதி

வியூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனஸ் பதவி ஏற்பு சத்தியப் பிரமாணம் செய்வதற்கு எர்ணாகுளம் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி பி.கமால் பாஷா அனுமதியளித்துள்ளார்.
நாளை பதவி பிரமாணம் நடைபெறுகிறது.அவ்வேளையில் போலீஸ் காவலுடன் அனஸை அழைத்துச் சென்றுவிட்டு,மீண்டும் போலீஸ் காவலுடன் சிறைக்கு அழைத்துவர வேண்டுமென நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
வருகிற செவ்வாய்க்கிழமை பேராசிரியர் அனஸின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் பரிசீலிக்கிறது.
செய்தி:தேஜஸ் - பாலைவனதூது