RSS மற்றும் ஹிந்துத்துவ இயக்கங்களிடம் போய் கேட்டால் பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் என்பது புரியும்

போராட்ட வீரியத்தின் சக்தியை பிரகடனப்படுத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமநீதி மாநாடு திருவனந்தபுரத்தில் புதிய வரலாற்றை எழுதியது. ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியை அவதூறுகளின் அலையில் மூழ்கடித்துவிட முடியாது என்று மாநாட்டில் திரண்ட மக்கள் வெள்ளம் உரக்க தெரிவித்தது. ’பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்?’ என்ற தலைப்பில் தேச முழுவதும் கடந்த ஒருமாதமாக நடந்து வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று(08/11/2012) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமநீதி மாநாடு நடந்தது.

பாசிச சிந்தனை மையத்தில் உருவெடுத்து உளவுத்துறையின் ஒப்புதலுடன் குறிப்பிட்ட சில ஊடகங்கள் பரப்பி வரும் அவதூறு பிரச்சாரங்களை முறியடிக்கும் விதமாக இம்மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களின் உரைகளும், மக்களின் பங்களிப்பும் எடுத்தியம்பியது.

திருவனந்தபுரம் புத்தரி கண்டம் மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு ஒற்றுமை கீதத்துடன் ஆரம்பித்த மாநாட்டை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா துவக்கி வைத்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில் கூறியது:

“சமநீதிக்கும், ஒடுக்கப்பட்ட மக்களை சக்திப்படுத்துவதற்குமான போராட்டத்தில் இருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு போதும் பின்வாங்காது. முஸ்லிம்களை சக்திப்படுத்துதல் மற்றும் சமநீதிக்கான சமரசம் இல்லாத போராட்டத்தின் காரணமாகத்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக சூழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த இயக்கத்திற்கு எதிராக சாட்டப்படும் எந்த குற்றச்சாட்டுக்களும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இயக்கத்தின் கொள்கைகள், சித்தாந்தம், பணிகள் ஆகியவற்றில் எவ்வித தவறுகளை கண்டுபிடிக்க முடியாததால் அவதூறு பிரச்சாரங்களின் மூலமாக களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

தேசப்பாதுகாப்பு என்ற பெயரால் இவ்வியக்கத்திற்கு எதிராக குரல் எழுப்புவோருக்கு நாட்டில் நிகழ்ந்த ஏதேனும் நாசவேலைகளில் பாப்புலர் ஃப்ரண்டிற்கு தொடர்பு இருப்பதாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால், குண்டுவெடிப்புகள், கூட்டுப் படுகொலைகளை நிகழ்த்தி மக்களுக்கும், தேசத்திற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பாசிசத்தை பாப்புலர் ஃப்ரண்ட் எதிர்க்கிறது.

சதித்திட்டங்களையும், அவதூறுப் பிரச்சாரங்களையும் முறியடித்து சமநீதியின் அடிப்படையில் புதியதொரு இந்தியாவை உருவாக்க அனைவரும் போராடவேண்டும்.” இவ்வாறு முஹம்மது அலி ஜின்னா கூறினார்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த லோக்ஜனசக்தி கட்சியின் தேசிய தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் தவிர்க்க முடியாத காரணங்களால் நேரடியாக கலந்துகொள்ள இயலாததால் அவர் தொலைபேசி வாயிலாக மாநாட்டை வாழ்த்தி உரை நிகழ்த்தினார். இம்மாநாட்டிற்கு கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் மெளலவி அஷ்ரஃப் தலைமை வகித்தார்.

Related

முக்கியமானவை 364296632295963217

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item