கூத்தாநல்லூர் நகர தமுமுக, மமக செயல் வீரர்கள் கூட்டம்

கூத்தாநல்லூர் நகர தமுமுக மமக செயல் வீரர்கள் கூட்டம் 11-11-2012 அன்று காலை 11 மணி அளவில் கூத்தாநல்லூர் நகர தமுமுக மற்றும் மமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மமகநகரசெயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்கள் தலைமை தாங்கினார், நகர செயலாளர் காதர் முஹினுதீன், மன்னை ஒன்றிய செயலாளர் ஜெஹபர் அலி,முன்னாள் நகர செயலாளர் நைனாஸ் அஹமது முன்னிலை வகித்தார்கள். நகர கூட்ட
த்தில் தமுமுக,மமக, மற்றும் மாணவர் இந்தியா நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அஸ்லம் ஸ்போர்ட்ஸ் கிளப், நியூ பிரெண்ட்ஸ் கிளப் , இஸ்மாயில் கிரிக்கெட் கிளப், ஜமாலியா பிரெண்ட்ஸ், மரக்கடை இஸ்லாமிய பொதுநல கமிட்டியை சர்ர்ந்த நண்பர்கள் தங்களது அமைப்பை தமுமுகவோடு இணைத்து கொண்டனர்.

நகர கூட்ட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


1. முன் அறிவிப்பின்றி மின்வெட்டை ஏற்படுத்தும் மின்சாரத்துறையை வன்மையாக கனடிக்கிறது.
2. டெங்கு காய்ச்சல் பரவமால் தடுக்க கூத்தாநல்லூர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
3. வரும் நவம்பர் 22 ஆம் தேதி திருவாரூர் மன்னார்குடி சாலையில் அமைந்துள்ள லக்ஷ்மாங்குடி அரசு மது பான கடைக்கு மாபெரும் பூட்டு போடும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது
4. திருவாரூரில் டிசம்பர் 6 தர்ணா போரட்டதிற்கு கூத்தாநல்லூர் நகரத்தில் இருந்து 30 வாகனங்களில் மக்களை அழைத்து செல்வதென முடிவு செய்ய பட்டது.

நிகழ்சிகளை நகர தமுமுக மாணவரணி செயலாளர் அக்பர் சலீம், மாணவர் இந்தியா செயலாளர் அப்துல் காதர் ஏற்பாடு செய்தனர்

முடிவில் முன்னாள் சோழ மண்டல மாணவரணி செயலாளர் அபுதாஹிர் நன்றி உரை ஆற்றினார்

Related

முக்கியமானவை 3080547247774652620

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item