இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்த்து போராடி தோற்கடிப்போம் - காலித் மிஷ்அல்
http://koothanallurmuslims.blogspot.com/2012/11/blog-post_4999.html
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை எதிர்த்து போராடி தோற்கடிக்க செய்வோம் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது. எகிப்தில் தங்கியுள்ள ஃபலஸ்தீன் மூத்த தலைவரும், ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவருமான காலித் மிஷ்அல் கெய்ரோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது: இஸ்ரேலுக்கு அடிபணியமாட்டோம். இஸ்ரேலை அங்கீகரிக்கவும் மாட்டோம். இறுதிவரை போராடுவோம். இஸ்ரேல் போர் நிறுத்தத்தை விரும்பினால், முதலில் தாக்குதலை நிறுத்தட்டும். யார் முதலில் தாக்குதலை துவக்கினார்களோ, அவர்கள் தாம் அதனை முடித்து வைக்க வேண்டும். முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலை தனிமைப்படுத்த வேண்டும். இஸ்ரேலுடனான உறவை துண்டிக்க வேண்டும். இவ்வாறு காலித் மிஷ் அல் கூறினார்.