மீண்டும் கோவையை கலவர பூமியாக்க துடிக்கும் ஹிந்துத்துவ சக்திகள்
http://koothanallurmuslims.blogspot.com/2012/11/blog-post_16.html
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன் RSS மாவட்ட செயலாளர் ஆனந்தன் என்பரை கொலை செய்யும் முயற்சி நடந்தது.
இதன் தொடர்ச்சியாக மேட்டுப்பாளையத்தில் அரசு பஸ் எரிக்கப்பட்டது. திருப்பூர், மேட்டுப்பாளையம், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் இந்து அமைப்புகள் பந்த் நடந்தது.
அரசு பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. பிறகு அதனை தொடர்ந்து கோவை மாநகரத்திற்கு உட்பட்ட செல்வபுரம் பகுதி செட்டி விதியில் RSS பிரமுகர் சபரிநாதன் இவருக்கு சொந்தமான ஜெ.பி கார்ஸ் அண்ட் பைக்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்தினர்.இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அந்த வழியாக இஸ்லாமிய வாலிபர்கள் வந்தார்கள். இவர்களை பார்த்ததும் காவி கும்பல் அந்த வலிபர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் தலையிட்டு அவர்களை மீட்டு போலீஸ் வேனில் ஏற்றினர். ஆனால் போராட்டக்காரர்கள் போலீசாருடன் காவி கும்பல்கள், கோவை பாரதிய ஜனதா முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் எம்பியுமான ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்து முன்னணி, RSS, VHP உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மோதலில் ஈடுபட்டார்கள்.
கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்களை பார்க்கும் போது. 97-98ம் ஆண்டை நோக்கி கோவை சென்று விடுமோ என்ற அச்ச உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
இதை பார்த்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் இருதரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கோவையில் உள்ள, இஸ்லாமிய இயக்கங்கள் தமுமுக, பாப்புலர் ஃபிரண்ட் போன்ற இயங்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
Media Voice