அமைதி திரும்பும் காஸ்ஸா!

இஸ்ரேலின் 8 நாட்களாக நீடித்த கொடூர தாக்குதலுக்கு பின்னர் காஸ்ஸாவுக்கு அமைதியை நோக்கி திரும்புகிறது.எகிப்தின் தலைமையில் நடந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கடந்த புதன் கிழமை இரவில் போர் நிறுத்தம் அமலானது. இஸ்ரேலும், ஃபலஸ்தீன் போராளிகளும் ஒரே நேரத்தில் வெற்றிப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட இரவு முதல் காஸ்ஸாவில் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். மக்கள் நடமாட்டம் இல்லாத வீதிகளில் திடீரென மக்கள் நெரிசல் அதிகமானது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் முஹம்மது கமால் அமரும், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனும் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்ற ஐக்கிய நாடுகள் பதுகாப்பு கவுன்சில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. இரத்தக் களரியை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் வகித்த எகிப்தின் அதிபர் முஹம்மதுமுர்ஸிக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நன்றி தெரிவித்துள்ளார்.

ஹமாஸின் உயர்மட்ட தலைவர் அஹ்மத் ஜஃபரி கொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காஸ்ஸாவில் மோதல் உருவானது. இஸ்ரேலின் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களின் சிதிலங்களை மாற்றும் பணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். நாசமடைந்த கடைகளும், வீடுகளையும் பரிசோதிக்கும் பணி துவங்கியுள்ளது.சீர்குலைந்த மின்சார லைன்களை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. மூடிக்கிடந்த கடைகள் நேற்று திறக்கப்பட்டன.இஸ்ரேலின் தாக்குதலில் 161 ஃபலஸ்தீன் மக்கள்
கொல்லப்பட்டனர். அதனிடையே, 55 ஃபலஸ்தீன் போராளிகளை இஸ்ரேல் அடாவடியாக கைதுச்
செய்துள்ளது.

மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானார்கள். காஸ்ஸாவின் மீதான கட்டுப்பாட்டை நீக்கவும், 24 மணி நேரத்திற்குள் காஸ்ஸாவின் எல்லைகளை திறக்கவும் போர் நிறுத்த தீர்மானம் அறிவுறுத்தியுள்ளது. நேற்று பொது விடுமுறையாக ஹமாஸ் அரசு அறிவித்திருந்தது.

அரசு பள்ளிகள், சனிக்கிழமை முதல் இயங்க துவங்கும் என கருதப்படுகிறது.கடந்த ஒருவார காலமாக கல்வி நிலையங்கள் மூடிக் கிடக்கின்றன.

Related

முக்கியமானவை 510863276129661531

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item