அஹ்மத் ஜஃபரி - வீரத்தளபதியின் வரலாறு..!
http://koothanallurmuslims.blogspot.com/2012/11/blog-post_23.html
கடந்த வாரம் காஸா மீது இஸ்ரேலிய இராணுவம் அவிழ்த்து விட்ட முரட்டுத்தனமான தாக்குதல்களால் ஹமாஸின் ஆயுதப்படைப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாமின் தலைவரான அஹ்மத் ஜஃபரி ஷஹீதாக்கப்பட்டார். இஸ்ரேலை பொறுத்தவரை , ஜஃபரி பல்லாண்டு காலமாக பெரும் தலையிடியாக இருந்தவர். இஸ்ரேலிய இராணுவத்தால் வேண்டப்பட்டவர்கள் பட்டியலில் முன்னணி ஹமாஸ் உறுப்பினராக
இருந்தவர்.
இவரின் மரணம் பற்றி ஹமாஸின் அரசியல் துறைப் பொறுப்பாளர் காலித் மிஷ்அல் குறிப்பிடும் போது ‘இவரின் மரணம் ஹமாஸ் படைப்பிரிவைப் பொருத்தவரை பெரும் இழப்பாக இருந்தாலும் , ஹமாஸின் பாதை நீண்டது. தொடர்ந்தும் அது போராடும்’ என்றார்.
அஹ்மத் ஜஃபரியின் மரணத்தைத் தொடர்ந்து அவருடைய வாழ்க்கை பற்றி அவரது குடும்ப அங்கத்தவர்கள் பல ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக அவரின் மனைவி ஹமாஸின் கஸ்ஸாம் வெப்தளத்துக்கு அளித்த பேட்டி வருமாறு,
‘நான் எனது கணவரை விட ஷஹாதத்தையும் , ஜிஹாதையும் விரும்பும் ஒருவரைக் காண்டதில்லை. மிகச் சிறந்த நேரத்தில் அல்லாஹ் அவருக்கு அந்தப் பாக்கியத்தை கொடுத்திருக்கிறான். தனது மரணத்திற்கு முன் மூன்று ஆசைகளுக்காக வாழ்ந்தவர். அந்த மூன்று ஆசைகளை தொடர்ந்தும் பலமுறை பலரிடமும் ஞாபகப்படுத்துபவராக இருந்தார். அவை , அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சும் ஒரு ஜிஹாதியப் படையை தனது ஷஹாத்திற்கு பின்னால் விட்டுச் செல்ல வேண்டும். இஸ்ரேலிய சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான கைதிகளை விடுவிக்க வேண்டும் , இஸ்லாத்தின் இறுதிக் கடமையாக ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும். இம்மூன்றையும் சாதித்து விட்ட பின்னரே எனது கணவர் ஷஹீதாகியுள்ளார். குறிப்பாக ,பலஸ்தீனக் கைதிகள் விடுவிக்கப்பட்ட நாளில் அவர் அடைந்த மகிழ்ச்சியை வர்ணிக்க முடியாது. சுருக்கமாக சொன்னால், எமது திருமண தினத்தில் இருந்த மகிழ்ச்சியை விட மகிழ்சியானவராக காணப்பட்டார்.
காஸா மீதான இஸ்ரேலிய படையின் தாக்குதல்கள் கடுமையான போது , அவர் சில தேவைகளின் நிமித்தம் வெளியே செல்வதற்கு தயாரானார். நான் அப்பொழுது வெளியே செல்ல வேண்டாம் என்று குறிப்பிட்டேன். அதற்கவர் சிரித்தவராக ‘நான் அல்லாஹ்வின் பாதையில் இந்த இக்கட்டான நேரத்தில் ஷஹீதாகினால், அதுவே அல்லாஹ் எனக்கு தந்த மிகப் பெரும் அருள் .’ ஏன்றார். பின்னர் என்னை நோக்கி ‘ அல்லாஹ் உன்னை ஏற்றுக் கொள்வானாக ‘ என்றார். அது தான் அவர் என்னுடன் பேசிய கடைசி வார்த்தை. இந்த வார்த்தையை தினமும் நான் கேட்பதற்கு ஆசைப்படுகிறேன். இன்னும் அவரின் தன்மைகள் வித்தியாசமானவை. அவர் மிகவும் துணிச்சலானவர். யாருக்கும் பயப்படமாட்டார். சில போது இஸ்ரேலிய யுத்த விமானங்கள் வானத்தை வட்டமிட்டுக் கொண்டிருக்கும் . அப்போது நான் அவரை வெளியே செல்ல வேண்டாம் என்று வலியுறுத்திச் சொல்லுவேன். ஏன்றாலும் , வானத்தில் விமானமே இல்லாதது போல் வெளியே சென்று பார்ப்பார். ஜிஹாதிய அழைப்புக்கு எனது கணவர் எப்போழுதும் மிக வேகமாக பதிலளிப்பவராக இருந்தவர். அவரிடம் பெருமை ஒரு சிறு துளியும் இருந்தது கிடையாது. மிகவும் பணிவானவர். காஸா மக்கள் மிகவும் நேசிக்கும் தலைவராக இருந்தவர். மீண்டும் சொல்கிறேன்! எனது கணவர் எவ்வளவு ஸாலிஹானவர் ! அவர் ஒரு சிறந்த தந்தையும் கூட!
இம்முறை ஹஜ்ஜூக்கு என்னையும் அழைத்துக் கொண்டு செல்லவே அவர் திட்டமிட்டார். என்றாலும் சில பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் மட்டுமே கடைசியில் சென்றார். கடைசியாக அவர் ஹஜ்ஜூக்கு செல்லும் போது என்னிடம் ‘ உயிருடன் இருந்தால் நிச்சியமாக உன்னையும் அடுத்த ஆண்டு ஹஜ்ஜூக்கு அழைத்துச் செல்லுவேன் ‘ என்று வாக்குறுதியளித்தார். ஹஜ்ஜின் போது ஜஃபரி கேட்ட அதிகமான துஆ ‘ தனக்கு உனது பாதையில் ஷஹீதாகக் கூடிய பாக்கியத்தை தரவேண்டும் ‘ என்பதாகத்தான் இருந்தது என்று அவருடன் பயணம் மேற்கொண்டவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எனது கணவர் தொழுகை விடயத்தில் மிகவும் கண்டிப்பானவர். தொழுகை கவனமாக பேணுமாறு வீட்டிலிருக்கும் அனைவருக்கும் அவர் வஸிய்யதாக பல முறை குறிப்பிட்டார். தொழுகை நேரத்தில் எனது பிள்ளைகளில் யாரவது வேறு வேலைகள் செய்து கொண்டிருந்தால் , மிகக் கடுமையாக கோபமடைவார்.’
அஷ்ஷஹீத் அஹமத் ஜஃபரியின் மகள் ‘ மிர்வா ‘ தனது தந்தையைப் பற்றி குறிப்பிடும் போது ‘ எனது தந்தை நாங்கள் எல்லோரும் நேரத்துக்கு தொழுகையை நிறைவேற்றுவதனைக் காணும் போதும் , அல்குர்ஆனை கற்பதற்காக தயாராகும் போதும் மட்டில்லாத மகிழ்சியடைபவராக இருந்தார். தந்தையின் தூண்டுதல்களினாலேயே நாம் அல்குர்ஆனை சிறப்பாக மனனம் செய்தோம்’ என்றார்.
அஹ்மத் ஜஃபரியின் 19 வயது மகன் முஃமின் தந்தை பற்றி குறிப்பிடும் போது ‘ அவரின் இறுதி நாட்கள் அவர் கிட்டிய விரைவில் அல்லாஹ்வை சந்திக்கப் போகிறார் என்பதனை உணர்த்தியது. ஏனெனறால் ஹஜ் கடமையயை நிறைவேற்றிய பின்னர், அவர் குடும்பத்தில் இருந்த எல்லோருடனும் நெருக்கமாக பேசுவார் . பழகுவார். அவரின் ஷஹாதத்தின் பிறகு தான் விடயம் தெளிவாக எங்களுக்கு புரிந்தது ‘ என்றார். அவர் கடைசியாக என்னிடம் அவரது கடன்கள் தொடர்பாக சிலவற்றை குறிப்பிட்டு நிறைவேற்றுமாறு குறிப்பிட்டார். பின்னர் எனது சகோதரிகளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு குறிப்பிட்டார். இன்னும் கடைசிவரை எந்நிலையிலும் தொழுகையை பள்ளிவாசலியே நிறைவேற்றுமாறும், ஜிஹாதை பற்றிப் பிடித்துக் கொள்ளுமாறும் ‘ குறிப்பிட்டார். பொதுவாக எனது தந்தை மிகவும் கவனமாக தனது நகர்வுகளை அமைத்துக் கொள்பவர். ஏன்றாலும், இம்முறை அல்லாஹ்வின் நாட்டம் அவர் எவ்வித பாதுகாப்புமின்றி வெளியே சென்றார். எனது தந்தை எந்தளவுக்கு ஹமாஸின் படைப்பிரிவில் தன்னை முழுமையாக தியாகம் செய்தாரோ , குடும்ப விடயத்தி;லும் மிகவும் கண்டிப்பானவர். ஏப்போதும் நாம் எவ்வாறு செயற்படுகிறோம் என்பதனை அவதானிப்பார். தேவைப்படும் போது தொடர்ந்து உபதேசங்களை தருவார் ‘ என்றார்.
அஷ்ஷஹீத் அஹ்மத் ஜஃபரியின் 15 வயது மகன் மாலிக் தனது தந்தையைப் பற்றி குறிப்பிடும் போது ‘எனது தந்தை வரலாற்று துறையிலும் , புவியியல் துறையிலும் சிறப்புப் பட்டம் பெற்றவர். அவர் என்னையும் புவியியல் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறுமாறு தூண்டிக் கொண்டிருந்தார். எனது தந்தையிடம் நான் கேட்ட ஒரு வார்த்தை இருக்கிறது. அதாவது எனது தந்தை ஹமாஸிற்கு ஆயுதங்கள் வாங்குவதற்காக தொடர்ந்தும் உழைத்தவர். ஆனால் ஒரு முறை என்னிடம் ‘ நாங்கள் சொந்தமாக அவற்றை செய்கின்றவர்களாக நாங்கள் மாறவேண்டும’ என குறிப்பிட்டார்.
ஜஃபரி தனது மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் அல்ஜஸீராவின் அரபுத் தொலைக்காட்சி சேவைக்கு பேட்டி ஒன்றை வழங்கினார். அதனை நாடாத்திய நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் ஜஃபரியிடம் ‘ உங்களுடைய உயிர் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளது. அது பற்றி என்ன குறிப்பிடுகிறீர்கள்? என கேட்ட போது ‘ எனக்கு அது நன்றாக தெரியும். ஆனால் எனது உயிரை விட எனது பிரச்சினை பெரியது. நான் சுவனத்தை விரும்புகிறேன் ‘ என்றார். அதேபோன்று , அண்மையில் அவர் அளித்த இன்னொரு பேட்டியில் ‘ அல்லாஹ்வை நான் பொருந்திக் கொண்டேன். நான் எனக்கு பின்னால் இஸ்ரேலியர்களை தூங்கவிடாமல் செய்யக் கூடிய ஒரு படையை தயார்படுத்தி இருக்கிறேன். அது எனக்கு நிம்மதியை தருகிறது ‘ என்றார். அல்லாஹ் அஹ்மத் ஜஃபரியின் ஷஹாதத்தை பொருந்திக் கொள்வானாக !