அரசியல் சாசனம்:முஸ்லிம் மார்க்க அறிஞர்களுடன் முர்ஸி பேச்சுவார்த்தை!

எகிப்தின் எதிர்கால அரசியல் சாசனத்தை உருவாக்குவது தொடர்பாகவும், அரசியல் சாசனத்தின் இஸ்லாமிய பின்னணி குறித்தும் அந்நாட்டின் அதிபர் முஹம்மது முர்ஸி, பிரபல முஸ்லிம் மார்க்க அறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அரசியல் சாசன உருவாக்க கமிட்டியுடனும் மார்க்க அறிஞர்களின் குழுவினர் விவாதித்தனர். எகிப்தின் பிரமுக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் முர்ஸியின் அழைப்பை ஏற்று அதிபரின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். ஷேக் அபூஇஸ்ஹாகுல் ஹுவைனி, டாக்டர் முஹம்மது அப்துல் மக்ஸூத் உள்ளிட்ட பிரபல மார்க்க அறிஞர்கள் இக்குழுவிற்கு தலைமை ஏற்றனர்.

மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட அமைப்புகளைச் சார்ந்த மார்க்க அறிஞர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஸலஃபிகள், ஷியாக்கள் உள்ளிட்டோரும் மார்க்க அறிஞர்களுடன் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு நடந்த அஸர்(மாலை நேர) தொழுகையை முர்ஸி தலைமையேற்று நடத்தினார். அவருக்குப் பின்னால் அனைத்துப் பிரிவைச் சார்ந்த மார்க்க அறிஞர்களும் தொழுகையை நிறைவேற்றினர்.

Related

முக்கியமானவை 7469708193909462759

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item