ஹமாஸ் அலுவலகங்களை மூடியது சிரியா பஸ்ஸார் அரசு!
http://koothanallurmuslims.blogspot.com/2012/11/blog-post_3324.html
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள ஃபலஸ்தீன் விடுதலை போராட்ட இயக்கமான ஹமாஸின் அலுவலகங்களை சிரியா அதிகாரிகள் மூடிவிட்டனர்.
சிரியா அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதின் அடக்குமுறை கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்ட ஹமாஸ், சிரியா அரசுடனான உறவை துண்டித்தது. சிரியா மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஹமாஸ் செய்தி தொடர்பாளர் அய்மன் தாஹா தெரிவித்துள்ளார்.
1990-ஆம் ஆண்டு முதல் ஹமாஸின் அலுவலகங்கள் டமாஸ்கஸில் இயங்கி வந்தன. ஹமாஸ் அரசியல் விவகார தலைவர் காலித் மிஷ்அலின் அலுவலகமும் டமாஸ்கஸில் செயல்பட்டு வந்தது. மக்கள் எழுச்சிப் போராட்டம் துவங்கியவுடன் மிஷ்அல் கெய்ரோ, காஸ்ஸா ஆகிய நகரங்களில் வசித்து வருகிறார். மேலும் ஹமாஸின் முக்கிய அலுவலகங்கள் காஸ்ஸாவுக்கு மாற்றப்பட்டன.