பாபர் மசூதி முதல் சார்மினார் வரை தொடரும் அவலங்கள்!

பழைய ஹைதராபாத் நகரில் உள்ள முஸ்லிம்களின் வரலாற்று சின்னமான 400 ஆண்டு பழமையான "சார்மினார்" வளாகத்தை ஆக்கிரமித்து அதில் கோவில் கட்ட ஹிந்துதுவாவினருக்கு உதவியாக இருந்தனர் காவல்துறை காவிகள்.

இதற்க்கு உடந்தையாக இருந்தவர்கள் சாதாரண காவலர்கள் இல்லை, 33 போலீஸ் உயர் அதிகாரிகள். ஹைதராபாத் பகுதியை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது முஸ்லிம்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத ஒரு போர் நடத்தப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரீத் திருநாளின் போது "குர்பானி" கொடுக்கும் பிராணிகள் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ்.,விஷ்வ ஹிந்து பரிஷத், அகில பாரத வித்யாதி பரிஷத், மற்றும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து கொண்டு போலீசார் செயல்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் "சப்சி மண்டி" பகுதியில் முஸ்லிம் கடைகளை சேதப்படுத்தி கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடிய விஷயத்திலும் போலீசுக்கு பங்குண்டு.

இந்த "சதி" திட்டத்துக்காக திருமண மண்டபம் ஒன்றில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது இதுவெல்லாம் உளவுத்துறைக்கு தெரிந்தே நடந்திருக்கிறது. சார்மினாரை பாதுகாக்க ஹைதராபாத் மாமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள், "ஆக்கிரமிப்பு கோவில்" கட்டுமானத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். .

சிந்திக்கவும்: குறிப்பிட்ட ஒரு மதத்தவரின் வழிபாட்டு தளங்களை ஹிந்துத்துவா குறிவைத்து தாக்குவதும், அதை உரிமை கொண்டாடுவதும் பாபரி மஸ்ஜித் தொடங்கி காசி, மதுரா, இப்போது குதுமினார் வரை நீள்கிறது. ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு நமது முன்னோர்கள் கோவிலுக்கு அருகாமையில் மசூதிகளும், மசூதிகளுக்கு அருகாமையில் கோவில்களையும் கட்டி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.

இவர்கள் வீட்டு திருமண வைபவங்களில் அவர்கள் கலந்து கொள்வதும், தீபாவளிக்கு, பொங்கலுக்கு முஸ்லிம்கள் சாமிக்கு படைத்ததை சாப்பிட மாட்டார்கள் என்பதற்காக உணவு பண்டங்களை தயாரித்ததும் சாமிக்கு படைப்பதற்கு முன் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள் நமது இந்து பெருந்தகை மக்கள்.

பதிலுக்கு முஸ்லிம்கள் ரமலான், பக்ரீத் போன்ற பண்டிகைகளில், விருந்துகளில் மாட்டிறைச்சி முக்கிய உணவாக இருந்தாலும் இந்து பெருமக்கள் கலந்து கொள்வார்கள் அவர்களுக்கு என்று தனியா ஆட்டிறைச்சி சமைத்து அவர்களை உபசரிப்பதும், சைவம் சாப்பிடும் இந்துக்களுக்காக தனியாக சைவ உணவு படைப்பதுமாக ஒருவருக்கொருவர் கொஞ்சி குலாவி மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

ஒருவரது நம்பிக்கையை மற்றவர்கள் அவமதிக்காது மதிபளித்தார்கள். ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கபரிவார் இயக்கங்கள் இந்த ஒற்றுமையில் மண்ணை அள்ளி போட்டார்கள். மதத்தை வைத்து அரசியல் நடத்தி ஆட்சியை பிடிக்கும் இவர்களது மலிவான யுக்திக்கு பலியாவது என்னவோ அப்பாவி மக்களே. மதத்தை வைத்து அரசியல், மதத்தை வைத்து வியாபாரம் என்று கிளம்பிய இந்த கூட்டத்தால் மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.

சார்மினார் Sultan Muhammad Quli Qutb Shah மன்னரால் 1591 ல் கட்டப்பட்டது.

Related

முக்கியமானவை 7368456751736223087

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item