பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? நீதிக்கான முழக்கம் - மதுரை மண்டல மாநாடு
http://koothanallurmuslims.blogspot.com/2012/11/blog-post_6.html
மாலை 6.45 மணிக்கு ஒற்றுமை கீதத்துடன் மாநாடு துவங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட்டின் மதுரை மாவட்ட தலைவர் இல்யாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது நஸ்ருதீன் தலைமையுரையாற்றினார்.
பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது நஸ்ருதீன்
பாப்புலர் ஃப்ரண்ட்மாநில செயலாளர் ஆரிப் பைசல் , அரசு டவுன் காஜியார் காஜா மொய்னுதீன், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் நஜிமுதீன் , பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில செயற்குழு உறுப்பினர்கள், பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாவட்ட தலைவர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் .
இம்மாநாட்டில் பாப்புலர் ப்ரண்டின் தேசிய பொது செயலாளர் கே.எம்.ஷரீப் , பாப்புலர் ப்ரண்டின் மாநில பொது செயலாளர் காலித் முஹம்மது , எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி , பா.ம.க மாநில துணைத் தலைவர் கஸ்ஸாலி , நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட்டின் மாநில தலைவர் பாத்திமா ஆலிமா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொது செயலாளர் கே.எம்.ஷரீப்
பாப்புலர் ப்ரண்டின் மாநில பொது செயலாளர் காலித் முஹம்மது
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி
மாநாட்டு தீர்மானங்களை புதுக்கோட்டை மாவட்ட
தலைவர் அபுபக்கர் சித்திக் மற்றும் விருதுநகர் மாவட்ட தலைவர் அபூபக்கர்
ஆகியோர் வாசித்தனர். மாநாட்டின் இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட்டின்
இராமநாதபுரம் மாவட்ட தலைவர் காலித் நன்றியுரையாற்றினார். இம்மாநாட்டில்
ஆண்கள், பெண்கள் ,குழந்தைகள் உள்பட பல்லாயிரகணக்கான மக்கள் கலந்து
கொண்டனர்.
மாநாட்டில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளம்
மாநாடு குறித்து பத்திரிகையில் வந்த செய்தி