வெங்காய ‘வியாபாரி’ அன்சாரி – ‘Q’ பிரிவு போலீஸாரால் ‘தீவிரவாதி(?)’ யாக கைது!

இந்திய ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ பயிற்சி மையங்களின் புகைப்படங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக கூறி, தமீம் அன்சாரி(35) என்பவரை  ‘கியூ’ பிரிவு போலீஸார்” கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவரின் மகன் தமீம் அன்சாரி, வெங்காய வியாபாரியான இவர் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அழகம்மாள் நகர், தாஜ் ரெசிடென்சி என்ற முகவரியில் வசித்து வருகிறார். எம்.ஏ. பட்டதாரியான அன்சாரியால்  இந்திய ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ பயிற்சி மையங்களின்  வீடியோ, வரைபடங்கள் ஆகியவற்றை “இணையதளம்” மூலம், இலங்கைக்கு அனுப்ப இயலவில்லையாம்(?).  இதனால், இலங்கைக்கு நேரடியாகச் சென்று அதை வழங்க திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும்போது தமீம் அன்சாரி கைது செய்யப்பட்டதாக  போலீசார் கூறுகின்றனர். இது வரை பாகிஸ்தானுக்கே செல்லாத அவர் மீது, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  தமீம் அன்சாரியிடமிருந்து 3 செல்போன்கள், 25 CDக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தமீம் அன்சாரி மீது, இந்திய அரசாங்க ரகசியங்கள் சட்டம் 1923-ன் 3,4,9 பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 120 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related

சமுதாயம் 3389692550156362067

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item