சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகை - பாப்புலர் ஃப்ரண்ட்
http://koothanallurmuslims.blogspot.com/2012/09/blog-post_15.html
இஸ்லாத்தையும், இறைவனின் இறுதித் தூதரான முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் மிகக் கேவலமாக விமர்சிக்கும் ‘Innocence of Muslims’ திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படங்களும், கார்ட்டூன்களும் உலகிற்கு புதியதல்ல.அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் சாம் பாசிலி என்ற யூதன் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளான். இரண்டு மணிநேரம் நீண்ட இத்திரைப்படத்தை எகிப்தில் ஒரு காப்டிக் கிறிஸ்தவர் அரபு மொழியில் மொழிமாற்றம் செய்து YouTube சமூக வீடியோ இணையதளத்தில் தர ஏற்றம் செய்ததைத் தொடர்ந்து உலகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது.
இறைத்தூதரை அவமதிக்கும் காட்சிகள் ‘Innocence of Muslims’ என்ற இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இறைத்தூதரின் உருவம் போல் கற்பனையில் அவதூறாக உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரமும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. YouTube-ல் வெளியான 13 நிமிட டிரைலரிலும் இறைத்தூதரை அவமதிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 2010-ஆம் ஆண்டு திருக்குர்ஆனின் பிரதியை எரிக்க அழைப்பு விடுத்த கிறிஸ்தவ பயங்கரவாதி டெர்ரி ஜோன்ஸின் அவதூறான கருத்துக்களை நியாயப்படுத்தும் காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
இச்சம்பவம் பெரும் எதிர்ப்பை கிளப்பியிருக்கும் வேளையிலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான யூதன் சாம் பாசிலி மீண்டும் இஸ்லாத்தை மோசமாக விமர்சித்து பேட்டியளித்துள்ளான். இஸ்லாம் ஒரு புற்றுநோய் என்று கருத்து தெரிவித்த பாசிலி தனது திரைப்படம் ஒரு அரசியல் சினிமா என்று கூறியுள்ளான். மேலும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த அவதூறான அவமதிக்கத்தக்க தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறுகிறான். இதைக் கண்டித்து உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் " இத்திரைப்படத்தில் நடித்த 14 பேரை உலக நீதிபதிக்கு முன் நிறுத்தி தண்டனை கொடுக்க வேண்டும் , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அனைத்து முஸ்லிம்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் , இந்திய அரசு அமெரிக்க மற்றும் இஸ்ரேலுடனான துதரக உறவை துண்டிக்க வேண்டும் " ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக 13 .09 .2012 அன்று மாலை 4 .00 மணி அளவில் சென்னை அண்ணா சாலையிலுள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இம்முற்றுகை போராட்டத்திற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ .எஸ் .இஸ்மாயீல் அவர்கள் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் SDPI கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக் முஹம்மது அன்சாரி , பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 350 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.