டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
http://koothanallurmuslims.blogspot.com/2012/09/blog-post_8.html
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கடந்த 6ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புதுடெல்லியிலுள்ள இஸ்லாமிய கலாச்சார மையத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல அரசியல் கட்சி தலைவர்கள், இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர்கள், சமூக ஆர்வளர்கள், மனித உரிமை போராளிகள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், என பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்தி தந்தார். அவர் தனது உரையில் ஒடுக்கப்பட்ட சமூகங்களான முஸ்லிம் சமூகம், தலித் சமூகம் மற்றும் பழங்குடியினரின் வலிமைக்கான போராட்டம் தேசிய அளவில் செயல்படும் சமூக இயக்கங்கள் மீதுள்ள பொறுப்பாகும். அம்மக்களுக்கான போராட்டம் ஒரு குறிப்பிட்ட இடத்தோடு நின்றுவிடக்கூடாது என கூறினார்.
கருத்தாலோசனைகள் பரிமாரப்படும் அமர்வை பாராளுமன்ற உறுப்பினரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் துவக்கி வைத்தார். இந்தியாவில் இஸ்லாமிய கலாச்சாரம் ஏற்படுத்திய நேர்மையான தாக்கம் தொடர்பான தன்னுடைய கருத்துக்களை ராம்விலாஸ் பாஸ்வான் பதிவு செய்தார். இந்தியாவிற்கு இஸ்லாம் வருவதற்கு முன்னால் தலித் மற்றும் ஆதிவாசிகளின் நிலை மோசமாகவும் பரிதாபமாகவும் இருந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். பிற்படுத்தப்பட்ட அம்மக்களை இஸ்லாம் தன் பக்கம் அழைத்து மிகப்பெரும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தியது. சமூக புரட்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இஸ்லாமிய இளைஞர்களையும், அமைப்புகளையும் தேச விரோத சக்திகளாக சித்தரித்து அவர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை கையாளப்பட்டுவருவதாக அவர் கூறினார்.
ஜாமியா நகர் சட்டமன்ற உறுப்பினர் ஆசிஃப் முஹம்மது கான், இந்தியா இஸ்லாஹி அமைப்பின் தலைவர் மெளலானா அப்துல் வஹாப் கில்ஜி, டெல்லி பல்கலைகழகத்தின் பேராசிரியர் சாய்பாபா, அனைத்து இந்திய எஸ்.சி, எஸ்.டி கூட்டமைப்பின் தலைவர் உதித் ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் டாக்டர் பஷீர் அஹமது கான், தஸ்லீம் ரஹ்மானி, மெளலானா உஸ்மான் பேக் ரஷாதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
முஜ்தபா ஃபாரூக் (வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா)
மெளலானா முஹம்மது அஹமது (ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்)
அஷு மாலிக் (சமாஜ்வாதி கட்சி)
அப்துல் காலிக் (எல்.ஜே.பி)
அமானதுல்லாஹ் கான் (எல்.ஜே.பி)
யாமின் செளதிரி (பீஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா)
ஆகியோர் விவாதத்தில் கலந்து கொண்டனர்.
பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் வரவேற்புரை நிகழ்த்தினார். டெல்லி மாநில தலைவர் மெளலானா கலீமுல்லாஹ் சித்தீகி நன்றியுரை நிகழ்த்தினார்.