பிரிவினைவாதம்:தாக்கரேக்கள் மீது வழக்கு!


பீகார் மாநில மக்களுக்கு எதிரான துவேச கருத்துக்களை வெளியிட்ட பிரிவினைவாதிகளான ராஜ்தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே மீது போலீஸார் வழக்குப் பதிவுச் செய்துள்ளனர்.

மும்பை ஆஸாத் மைதானத்தில் அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்து நடந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் வன்முறை வெடித்தது. இதுத் தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சார்ந்த ஒருவரை மும்பை போலீஸார் பீகார் மாநில போலீசுக்கு தெரியாமலேயே அங்கு சென்று கைது செய்தனர். இச்சம்பவத்திற்கு பீகார் மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளித்த மஹராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, பீகார் மாநிலத்து மக்களை வெளியேற்றுவோம் என கொக்கரித்தார். ராஜ்தாக்கரேயின் வெறித்தனமான பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் சிவசேனாவின் செயல் தலைவரான உத்தவ் தாக்கரே, பீகார் மாநில மக்கள் தங்களைக் குறித்த விபரங்களை பதிவுச் செய்த பின்னரே மும்பையில் நுழையவேண்டும் என தமது சாம்னா பத்திரிகையில் எழுதியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் ஜேம்ஸ் குவாத்ரேஸ் என்பவர், இருவருக்கும் ( ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே) எதிராக பகல்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் எஸ்.பி. மாள்வியா முன்னர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பது:  ”பீகார் மாநிலத்தவர்கள் தொடர்பாக இந்த இரண்டு கட்சித் தலைவர்களும் தெரிவித்துள்ள கருத்துகள் இந்திய இறையாண்மைக்கும் விரோதமாகவும், ஒற்றுமையைக் குலைக்கும் விதமாகவும் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், வழக்குரைஞர் சுதிர்  என்பவர் முஸாஃபர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் எஸ்.பி. சிங் முன் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில்,  “பீகார் மாநிலத்து மக்கள் மஹராஷ்ட்ரா வருவதற்கு முன்அனுமதி பெற வேண்டும் என்று கூறியிருப்பது பீகார் மக்களை மிகவும் பாதித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், மஹாராஷ்டிர நவநிர்மாண் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் சிவசேனை கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related

இந்தியா 8535265668946199287

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item