முஸ்லிம்களை கொன்றதில் தவறில்லை : பிரவீன் தொகாடியா ஆணவம்!

நரோடா பாட்டியா இனக்கலவரத்தில், மரண தண்டனை வழங்க வேண்டிய அளவுக்கு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன, என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில்,

தவறே செய்யாத போது தண்டனை எதற்க்கு? என, நீதிமன்ற தீர்ப்பை காட்டமாக விமர்சித்துள்ளார், விஷுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர்,பிரவீன் தொகாடியா. இது போன்ற தீர்ப்பு வழங்குவது அமெரிக்க நடைமுறை என்று கூறிய அவர், இந்தியாவில் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது,என்றார். குற்றவாளிகளின் குடும்பங்களுக்கு வி.ஹெச்.பி., பாதுகாப்பு அரணாக செயல்படும் என்று உறுதியளித்த தொகாடியா, தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை செல்வோம் என்றார். இந்த வழக்கில், 327 சாட்சிகளையும், 2500 ஆதாரப்பூர்வ ஆவணங்களையும் விசாரித்த நீதிபதி, நரோடா பாட்டியாவில் நடத்தப்பட்டது, முஸ்லிம்களுக்கெதிரான "இனக்கலவரம்" இந்த குற்றங்கள் கேன்சரை போன்றது இதை பரவ விடக்கூடாது என்றும், நீதிபதி உறுதிப்பட தெரிவித்தார். மேலும், இனக்கலவரத்தைப் பொருத்தவரை, இனிமேல் நாட்டில் அப்படியொரு குற்றம் நடக்கக் கூடாது என்ற அடிப்படையில்தான், இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது தான் பொருத்தமானது. என்றாலும், 139 நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துவிட்டதாகக் கூறிய நீதிபதி, மரண தண்டனை ஒரு தீர்வாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

Related

இந்துத்துவா 2038841978097006398

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item