PFI, SDPI-க்கு எதிரான RSS-CPM பத்திரிகைகளின் சூழ்ச்சி தோல்வி!

சர்வதேச சந்தையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பு வரும் ப்ரவுன் சுகர் என்ற போதைப் பொருளுடன் கைதான நபருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ க்கும் தொடர்பு இருப்பதாக அவதூறான செய்தியை வெளியிட்ட  ஆர்.எஸ்.எஸ்-சி.பி.எம் பத்திரிகைகளின் பொய் அம்பலமாகியுள்ளது.

கேரள மாநிலம் குருவாயூரில் அண்மையில் ஷானிஃப் என்ற நபர் ப்ரவுன் சுகர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே சாவக்காடு பகுதியில் எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்களை தாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். ஆனால், எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கங்களுக்கு எதிராக பகை உணர்வுடன் செய்திகளை வெளியிட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசாபிமானி பத்திரிகையும், ஆர்.எஸ்.எஸ்ஸின் ஜன்ம பூமி நாளிதழும் உண்மையை மூடி மறைத்து இந்நபருக்கு இவ்விரு இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக அவதூறுச் செய்தியை வெளியிட்டது.

ஆனால், ஆர்.எஸ்.எஸ்-சி.பி.எம் பத்திரிகைகளின் மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் போலீசார் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு பத்திரிகைகளிலும் வெளியான செய்தி பொய் என்று துணை போலீஸ் கமிஷனர் ஆர்.கே.ஜெயராஜ் மற்றும் குருவாயூர் வட்டார ஆய்வாளர் கே.ஜி.சுரேஷ ஆகியோர் தெரிவித்தனர்.

Related

முக்கியமானவை 8181630394931666702

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item