தொடரும் முஸ்லிம் வேட்டை: தீவிரவாதத்தின் பெயரால் 11 இளைஞர்கள் கைது

அரசியல் தலைவர்கள் உள்பட பிரமுகர்களை கொலைச்செய்ய திட்டம் தீட்டினார்கள் என குற்றம் சாட்டி 11 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து மீண்டும் தனது முஸ்லிம் வேட்டையை துவக்கியுள்ளது கர்நாடகா பா.ஜ.க அரசு. இதில் பிரபல பத்திரிகையான டெக்கான் ஹெரால்டில் பணியாற்றும் பத்திரிகையாளர் மற்றும் டி.ஆர்.டி.ஒ எஞ்சீனியர் மற்றும் டாக்டர் ஆகியோரும் அடங்குவர்.

ஹுப்ளி, பெங்களூர் ஆகிய பகுதிகளில் இருந்து இவர்களை கைது செய்ததாக கர்நாடகா மாநில டி.ஜி.பி தெரிவித்துள்ளார். போலீஸ் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை காலையில் ஹுப்ளி மற்றும் பெங்களூர் ஜெ.சி நகரில் கெம்பய்யா ப்ளாக்கில் முபாரக் மஸ்ஜிதுக்கு அருகே உள்ள வாடகை வீட்டில் வைத்து இவர்களை போலீஸ் கைது செய்துள்ளது. சாதாரண உடையில் வந்தவர்கள் இளைஞர்களை பிடித்துக் கொண்டுச் சென்றதாகவும், அவர்களைக் குறித்து தகவல் எதுவும் இல்லை என்றும் குற்றம் சாட்டி உறவினர்கள் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர்.

இச்செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாலை போலீஸ் கைதை உறுதிச் செய்தது.

இவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கியும், தீவிர செயல்கள் தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றியதாக போலீஸ் கூறுகிறது.

முஸ்லிம் இளைஞர்களின் கைதின் பின்னணியில் மர்மம் நீடிக்கிறது.

Related

முக்கியமானவை 6362687100740043794

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item