ஒரு வார போராட்டத்திற்கு ஹிஸ்புல்லாஹ் அழைப்பு

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக ஒரு வார கால போராட்டத்திற்கு லெபனான் இஸ்லாமிய போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அவமானத்திற்கு எதிராக மெளனம் சாதிக்க முஸ்லிம்களால் இயலாது என்பதை உலகிற்கு உணர்த்த இத்தகையதொரு போராட்டம் தேவை என்று நஸ்ருல்லாஹ் கூறியுள்ளார். ஹிஸ்புல்லாஹ்வின் அல் மனார் தொலைக்காட்சியில் நடத்திய உரையில் அவர் போராட்டத்திற்கான அழைப்பை விடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறியது:  போராட்டங்கள் அமெரிக்க தூதரகங்கள் முன்பாக மட்டுமல்ல, முஸ்லிம்கள் நாடுகள், அமெரிக்க எதிர்ப்பு கொள்கையை கடைப்பிடிக்க வலியுறுத்தியும் போராட்டங்கள் அமையவேண்டும். முன் காலங்களில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இறைத்தூதரையும், இஸ்லாத்தையும் அவமதிக்கும் வகையில் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் வசனங்கள்’ மற்றும் டென்மார்க் பத்திரிகையில் வெளியான கார்ட்டூனை விட இத்திரைப்படம் மிகவும் இகழத்தக்க வகையில் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மண்ணில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதால் அமெரிக்காதான் முக்கிய குற்றவாளியாக கருதப்படும். திரைப்படத்தை தயாரித்தவர்களிடம் விசாரணை நடத்தி தண்டனை அளிக்கும் பொறுப்புடைய அமெரிக்கா, அவர்களை ஆதரிக்கவும், உதவவும் செய்கிறது என்று நஸ்ருல்லாஹ் கூறினார்.

Related

முக்கியமானவை 534834270572897782

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item