மேற்காசியாவில் முக்கிய பிரச்சனை ஃபலஸ்தீன்! – ஈரான்!

மேற்காசியாவின் முக்கிய விவகாரமாக ஃபலஸ்தீன் பிரச்சனையை கருதவேண்டும் என்று ஈரான் கருத்து தெரிவித்துள்ளது.

ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் நடத்திய சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நஜாத் கூறியது:

ஃபலஸ்தீன் விவகாரத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஏதேனும்ஒரு வகையில் தலையிட்டுக் கொண்டே இருக்கவேண்டும். இஸ்ரேலுக்கு பிராந்தியத்தில் ஆதரவு இல்லை. ஃபலஸ்தீன் முழுவதும் ஃபலஸ்தீன் மக்களுடையதே. ஃபலஸ்தீன் மக்களே அவர்களின் உரிமைகளை தீர்மானிக்க வேண்டும்.  இஸ்ரேலை அங்கீகரிக்காத, இஸ்ரேல் கூட்டுப் படுகொலைகளை நிகழ்த்தும் ஆக்கிரமிப்பு அரசு என்று பிரகடனப்படுத்திய ஒரே நாடு ஈரான் ஆகும். இவ்வாறு நஜாத் கூறினார்.

ஃபலஸ்தீனுக்கு ஈரான் அளித்து வரும் ஆதரவுக்கு மஹ்மூத் அப்பாஸ்,  நஜாதிற்கு நன்றி தெரிவித்தார். ஃபலஸ்தீனையும், ஃபலஸ்தீன் மக்களையும் மிகவும் விரும்புபவர்கள் ஈரான் மக்கள் என்று மஹ்மூத் அப்பாஸ் கூறினார். யாஸிர் அரஃபாத்திற்கு பிறகு ஈரான் செல்லும் முதல் ஃபலஸ்தீன் ஆணைய தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ஆவார்.

Related

முக்கியமானவை 6909625720693398284

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item