கூத்தாநல்லூர் - PFI தெருமுனை கூட்டம்
http://koothanallurmuslims.blogspot.com/2012/09/pfi_15.html
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் நடைபெற்று வரும் சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை என்னும் பிரச்சார தெருமுனை கூட்டம் கூத்தாநல்லூர் மேலகடைதெரு இந்தியன் வங்கி அருகில் நேற்று மாலை 6:40 மணி தொடங்கி இரவு 9:20 மணி வரை நடைபெற்றது.
இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பூதமங்கலம் கிளை தலைவர் சகோ ரியாஸ் அஹமது அவர்கள் தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தினார். தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோ ஜர்ஜிஸ் முகம்மது அவர்கள் சிறப்புரை ஆற்றினார். ஜர்ஜிஸ் அவர்கள் பேசும்போது இந்தியாவில் நடைப்பெற்ற 16 குண்டு வெடிப்புகளின் முக்கிய குற்றவாளிகளான இந்துத்துவ தீவிரவாதிகளின் செயல்களை மக்கள் முன் அம்பலபடுதினார். நம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக காவிகளுடன் கை கோர்த்து செயல் படும் உளவு துறை மற்றும் காவல் துறையின் அயோக்கியதனத்தை தோலுரித்தார். இக்கூட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கூத்தாநல்லூர் கிளை சகோதரர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர். இக்கூட்டத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி திரைப்படம் வெளியிட்ட யூத வெறி நாய்களை கண்டித்து தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.