SDPI போராட்டம் எதிரொலி: புனேயில் இடிக்கப்பட்ட பள்ளிகூடம் மீண்டும் கட்டப்படும்

மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேக்கு அருகிலிலுள்ள எர்வாதாவில் சிறுபான்மை சமூகத்தவர்களால் நடத்தப்பட்டுவரும் ஹெச்.ஜி.எஸ் உருது பள்ளிக்கூடத்தை எஸ்.டி.பி.ஐயின் போராட்டத்தின் காரணமாக மீண்டும் கட்டிக்கொடுக்க அதிகாரிகள் சம்மதித்தனர்.

மஹாராஷ்ட்ரா வீட்டுவசதிவாரியம் முன்னறிவிப்பு இல்லாமலேயே மாணவர்களையும், ஆசிரியர்களையும் வெளியேற்றிவிட்டு பள்ளிக்கூடம் செயல்பட்டுவந்த கட்டிடத்தை இடித்துள்ளனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 500 மாணவ மாணவிகள் படித்துவந்த கட்டிடத்தை மீண்டும் கட்டித்தர பல தடவை மனுக்களை அளித்த பிறகும் எவ்வித பயனும் இல்லாதன் காரணத்தால் எஸ்.டி.பி.ஐ உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியது.

தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் தலைமை இப்பிரச்சனையில் மெளனம் சாதித்த பொழுது எஸ்.டி.பி.ஐ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்திய போராட்டம் அவ்வூர் மக்களின் கண்னைத் திறந்தது.

எஸ்.டி.பி.ஐயின் மகளிர் அணியினரும் போராட்ட களமிறங்கி புனே மாநகராட்சி பணிகளுக்கு தடை ஏற்படுத்தினர். உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ தொண்டர்களுக்கு ஆதரவு தெரிவித்து பள்ளிக்கூட மாணவர்களும், ஆசிரியர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

மஹராஷ்ட்ரா வீட்டுவசதி வாரிய அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்பை எடுக்க ஆரம்பித்தபொழுது வாரியத் தலைவர் புன்குஷ் கக்காடே தனது பிடிவாதத்தை கைவிட்டார்.

இடிக்கப்பட்ட பள்ளிக்கூடத்தை அதே இடத்தில் கட்டித் தருவதாக எஸ்.டி.பி.ஐ புனே மாவட்ட செயலாளர் ஸாக்கிர் எ.ரஸ்ஸாக் ஷேக், அஸ்லம் எ லத்தீஃப், ரியாஸ் அஹ்மத் ஆகியோரிடம் அதிகாரிகள் தரப்பிலிருந்து வாக்குறுதியளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் நீண்ட உண்ணாவிரதப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

செய்தி:தேஜஸ்

Related

SDPI 8852089175101340276

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item