எங்கள் உயிர் உள்ளவரை இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம் - ஹஸன் நஸ்ருல்லாஹ் சூளுரை

"நாங்கள் உயிருடன் இருக்கும்வரை இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம். மேலும் ஃபலஸ்தீனின் ஒரு இஞ்ச் நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்கமாட்டோம்" என லெபனான் ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

முஹர்ரம் 10வது நாள் ஆஷூரா மற்றும் இமாம் ஹுஸைன்(ரலி...) அவர்களின் உயிர் தியாக நினைவு தினத்தில் ஆயிரக்கணக்கான லெபனான் மக்களிடையே ஹஸன் நஸ்ருல்லாஹ் உரை நிகழ்த்தினார்.

ஃபலஸ்தீன் மக்கள் தங்கள் உரிமையை கோருவதை கைவிட்டுவிடுமாறு கூற எவருக்கும் உரிமையில்லை. நாங்கள் எல்லா விஷயத்திலும் ஃபலஸ்தீன் மக்களுக்கு உறுதுணையாக இருப்போம். அரப் லீக்கின் மேற்பார்வையில் இஸ்ரேல் மற்றும் ஃபலஸ்தீன் ஆணையத்திற்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை காலத்தை விரயமாக்குவதாகும்.

இஸ்ரேல் கடலோரப் பகுதியில் 2007 ஆம் ஆண்டு ஏற்படுத்திய தடையை நீக்கவேண்டும். 15 லட்சம் காஸ்ஸா மக்கள் வறுமையால் வாடுகின்றனர். மத்திய கிழக்கின் மோதலை தீர்க்க ஒரே வழி எதிர்த்துப் போராடுவதுதான். இவ்வாறு நஸ்ருல்லாஹ் உரையாற்றியுள்ளார்.

Presstv - பாலைவனதூது

Related

lebanon 8748076923543473570

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item