அமெரிக்க-இஸ்ரேல் உறவை வெளிக்கொணர விக்கிலீக்ஸ் தயாராகவேண்டும் - அரபுநாட்டு மக்கள்

இஸ்ரேலின் நிர்பந்தங்களுக்கு அமெரிக்கா அடிபணிவதைக் குறித்த விபரங்களை வெளியிட்டால் மட்டுமே விக்கிலீக்ஸின் நம்பகத் தன்மையை உறுதிச்செய்ய இயலும் என அரபு நாட்டுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அத்தகையதொரு அதிர்ச்சி தகவலுக்காக தாங்கள் காத்திருப்பதாக அரபு நாட்டு மக்கள் தெரிவிப்பதாக பெனின்சூலா செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் தவறான வெளியுறவுக் கொள்கைகளை விக்கிலீக்ஸ் வெளிக்கொணருகிறது என்றால் டெல்அவீவிற்கும் வாஷிங்டன்னிற்கும் இடையே பரிமாறப்பட்ட ஆவணங்களை வெளியிட அவர்கள் தயாராக வேண்டும்.

அமெரிக்க அதிகாரிகள் அல்லது இஸ்ரேலின் மறைமுக உதவி விக்கிலீக்ஸிற்கு கிடைப்பதாக வளைகுடா நாட்டு மக்கள் கருதுகின்றனர்.

காஸ்ஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் மனிதத் தன்மைக்கு மாற்றமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா அளித்துவரும் தார்மீக ஆதரவு தொடர்பான அல்லது வருடந்தோறும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அளித்துவரும் ராணுவ மற்றும் பொருளாதார உதவித்தொடர்புடையதான ஒரு ஆவணத்தையும் விக்கிலீக்ஸ் இதுவரை வெளியிடவில்லை.

சில வறுமையில் சிக்கி தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் அமெரிக்கா நடத்திவரும் மனித உரிமை மீறல்களைக் குறித்தும் விக்கிலீக்ஸ் இதுவரை எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை.

கடைசியாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் ஈரானையும், வளைகுடா நாடுகளையும் குறிவைக்கிறது. அந்தநாடுகளுக்கிடையேயான உறவில் வேட்டு வைக்கிறது.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுவரும் ஆவணங்களைக் குறித்து கருத்துத் தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என எடுத்துரைக்கின்றனர் அரபு நாட்டு மக்கள்.

செய்தி:தேஜஸ் - Koothanallur

Related

அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரத்தில் உறுதியாக இருப்பது NDF: விக்கிலீக்ஸ் தகவல்

பல ரகசியமான தகவல்களை வெளியிட்டு வரும் அமெரிக்கரால் நடத்தப்பட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம் தற்போது பாப்புலர் ஃப்ரண்டின் நிலைப்பாட்டை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் கேரளத்தில் செயல்பட்டுவரு...

விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் நடத்தும் பழிவாங்கும் ஹேக்கிங் போர்

விக்கிலீக்ஸிடம் எதிரிகளாக நடந்துக் கொள்வோர் மீது அந்த இணையதளத்தின் ஆதரவாளர்கள் ஹேக்கிங் போரை துவக்கியுள்ளனர். விக்கிலீக்ஸிற்கு எதிராக செயல்படும் நிறுவனங்கள், அரசுகள் ஆகியவற்றின் இணையதளங்களை குறிவைத...

6 மணி நேரத்திற்குள் புதிய இணையதள முகவரியில் விக்கிலீக்ஸ்

அமெரிக்காவின் நிர்பந்தம் மூலம் உருவான நடவடிக்கைகளையும், ஹேக்கர்களின் தாக்குதல்களையும் எதிர்கொண்ட விக்கிலீக்ஸ் 6 மணிநேரத்திற்கு பிறகு புதிய இணையதள முகவரியில் செயல்படத் துவங்கியுள்ளது. EveryDNS.net ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item