டிசம்பர் 6யை தலித்-இஸ்லாமியர் எழுச்சி நாளாக கடைப்பிடியுங்கள்: திருமாவளவன்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6ம் தேதியை தலித்- இஸ்லாமியர்கள் எழுச்சி நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், வரும் 26ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழர் இறையாண்மை மாநாடு இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தமிழரை தலை நிமிர வைக்கும் வகையிலும், இலங்கைத் தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும் அமையும்.

புரட்சியாளர் அம்பேத்கார் குறித்த வரலாற்றுத் திரைப்படத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட மானியம் ஒதுக்கிய முதல்வர் கருணாநிதிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழர் இறையாண்மை மாநாட்டிற்கு என தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவில் உஞ்சை அரசன், கவுதம சென்னா, ஆர்வலன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வரவேற்பு குழுவில் சிந்தனைச் செல்வன், ரெனீஸ்நாதன், பாவரசு, பாவலன், தகடூர் தமிழ்ச்செல்வன், ஆகியோரும் விளம்பரக் குழுவில் கா.கலைக்கோட்டுதயம், முகமது யூசுப், வெற்றிச்செல்வன், அப்துல்ரகுமான் ஆகியோர் உள்ளனர்.

மாநாட்டு மலர்க்குழுவில் ரவிக்குமார், வன்னியரசு, பாவலர் தணிகைச் செல்வன், நீலத்தமிழேந்தி, ஆதிரை ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6ம் தேதியை தலித்- இஸ்லாமியர்கள் எழுச்சி நாளாக கடைப்பிடிக்க வேண்டும்.

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெல்லும்:

நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் தொடர்ந்து 3 வார காலமாக பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றம் முழுமையாக முடங்கியுள்ளது. ராசா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார், சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது, வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அப்படியும் நாடாளுமன்றத்தை முடக்குவது மக்கள் விரோத செயல்.

ஜேபிசி விசாரணை தான் வேண்டும் என்கின்றனர். அது குறித்து இரு அவைகளிலும் விவாதிக்கலாம் என்று கூறியும் நாளுமன்றத்தை நடத்த விடாமல் செய்வது ஜனநாயக விரோத செயல்.

மத்திய அமைச்சர்கள் பிரமோத் மகாஜன், அருண் ஷோரி ஆகியோர் பின்பற்றிய நடுவடிக்கையைத் தான் ராசாவும் பின்பற்றியதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் இருந்தபோது நடந்த ஊழல்கள் பற்றி ஏன் யாரும் வாய் திற்க்கவே இல்லை?. பாஜக, ஜெயலலிதா, சுப்பிரமணியசாமி ஆகியோர் ராசாவை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

யார் ஊழல் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் கருத்து. ஆனால் அருண் ஷோரிக்கு ஒரு நீதி, ராசாவுக்கு ஒரு நீதி என்பது தலித் விரோத போக்கு.

வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இக்கூட்டணியில் சேர விரும்புபவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். ஆனால் யாரைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்வது என்பது பற்றி முதல்வர் தான் முடிவு செய்வார்.

எங்கள் கட்சியில் சேர்ந்துள்ள 42 லட்சம் உறுப்பினர்களில் 10 சதவீதத்தினர் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்.

Thatstamil.com 

Related

tiruma 7494984775478471605

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item