மெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான வழக்கில் அபினவ் பாரத் இந்து அமைப்பைச் சேர்ந்த தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் சர்மா ஆகியோர் மீது ஹைதராபாத் கோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந்த இருவரும் ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் மெக்கா மசூதியில், 2007ம் ஆண்டு மே 18ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடித்தது. மசூதி வளாகத்திற்குள் வெடித்த இந்த குண்டில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. வழக்கில் அபினவ் பாரத் என்ற வலதுசாரி இந்து தீவிரவாத அமைப்புக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அமைப்பின் சர்மா, குப்தா உள்ளிட்ட 6 பேர் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் சர்மா, குப்தா ஆஜ்மீர் வழக்கில் சிக்கி கைதாகியிருந்தனர். அவர்களை ஹைதராபாத்துக்குக் கொண்டு வந்து விசாரித்த சிபிஐ, பின்னர் இருவரையும் ஹைதராபாத் சிறையில் அடைத்தது. வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்தீப் சாங்கே, ராமச்சந்திர கல்சங்கரா என்கிற ராம்ஜி ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இன்னொரு குற்றவாளியான சுவாமி அஸ்னிமானந்த் சிபிஐயின் விசாரணை வளையத்தில் உள்ளார். இன்னொரு குற்றவாளியான சுனில் ஜோஷி என்பவர் 2007ம் ஆண்டிலேயே கொல்லப்பட்டு விட்டார்.

இந்த வழக்கில் நேற்று 14வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது சிபிஐ. 80 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில் அபினவ் பாரத் அமைப்புதான் இந்த செயலுக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Thatstamil - கூத்தாநல்லூர் 

Related

VHP 8023335364468543001

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item