அல்-உம்மா’ பாஷாவுக்கு 10 நாள் பரோல்
![](https://resources.blogblog.com/img/icon18_edit_allbkg.gif)
http://koothanallurmuslims.blogspot.com/2010/12/10.html
மனைவியின் உடல் நலத்தை கவனிப்பதற்காக, “அல்-உம்மா’ தலைவர் பாஷாவுக்கு, பாதுகாப்புடன் கூடிய 10 நாள் பரோல் அனுமதிக்கப்பட்டது. கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் பாஷா; அல்-உம்மா நிறுவனத் தலைவரான இவர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உக்கடம், பிலால் நகரில் வசிக்கும் இவரது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பக்கத்தில் இருந்து மனைவியை கவனித்துக் கொள்ள, ஒரு மாதம் பரோல் அனுமதி கேட்டு தமிழக அரசின் உள்துறைக்கு மனு அனுப்பினார். இம்மனுவை பரிசீலித்த உள்துறை, 10 நாள் பரோல் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு கோவை சிறையில் இருந்த பாஷாவை, பிலால் நகரில் உள்ள வீட்டுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இரவு நேரங்களில் சிறைக்கு வராமல் தொடர்ந்து 10 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டியுள்ளதால், பாஷாவுக்கு பாதுகாப்பு அளிக்க மூன்று இன்ஸ்பெக்டர்கள், நான்கு எஸ்.ஐ.,க்கள் மற்றும் 11 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். தவிர, கண்காணிப்பு பணியில் கோவை மாநகரில் செயல்படும் பல்வேறு உளவுப்பிரிவினரும் ஈடுபட்டுள்ளனர். 10 நாள் பரோல் முடிந்து ஜன., 5ல் மீண்டும் பாஷா சிறையில் அடைக்கப்படுகிறார்.