'லவ் ஜிஹாத்' - குற்றச்சாட்டுகளை நிராகரித்து கேரள உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு

முஸ்லிம் சமுதாயத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதை லட்சியமாகக் கொண்ட 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டை கேரள மாநில உயர்நீதிமன்றம் முற்றிலும் நிராகரித்து இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சில ஊடகங்களும், அமைப்புகளும் அதிக ஆர்வம் காண்பித்த 'லவ் ஜிஹாதி'ற்கு எவ்வித ஆதாரமுமில்லை என கேரள மாநில உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதிபட கூறியுள்ளது.

இவ்வழக்கில் பத்தணம்திட்டை என்ற இடத்தைச் சார்ந்த ஷாஹின்ஷா என்பவர் தாக்கல் செய்த மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது கேரள மாநில உயர்நீதிமன்றம்.

தனக்கெதிராக திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றும் நிலுவையில் இல்லை எனவும், எனவே விசாரணையை பரிபூரணமாக வாபஸ்பெற வேண்டுமெனவும் கோரி ஷாஹின்ஷா கேரள உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

மனுவை பரிசீலித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சசீதரன் நம்பியார், ஒரு குறிப்பிட சமூகத்தை குற்றவாளிக் கூண்டில் நிற்கவைக்கும் விசாரணையை முடித்துவிட போலீசாரிடம் வலியுறுத்தினார். தொடர்ந்து ஷாஹின்ஷாவுக்கு எதிரான விசாரணையைக் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் இளம் பெண்கள் இருவரின் பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்த எர்ணாகுளம், திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றங்களின் விசாரணை அறிக்கையை போலீஸ் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின்படி எவ்வித ஆதாரமும் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கெதிராக இல்லை என நீதிபதி கண்டறிந்தார். 'லவ்ஜிஹாத்' குற்றச்சாட்டை நிரூபிக்கும் எவ்வித ஆதாரத்தையும் போலீசாரால் கண்டறிய இயலவில்லை. இதனால் இவ்வழக்கில் இனிமேல் விசாரணை தேவையில்லை என இறுதித் தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பளித்துள்ளது.

செய்தி:தேஜஸ்

Related

pfi 1571196031984642512

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item