பாப்புலர் பிரண்டின் புதிய தேசிய தலைவர்கள்

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் தேசிய பொதுக் குழுக்கூட்டம் தமிழ்நாட்டிலுள்ள தேனியில் நடைபெற்றது . சேர்மன் இ எம் அப்துர் ரஹிமான் தலைமை தாங்கி பேசினார் . அவர் தனது அறிமுக உரையில் ,
தேசத்தை வலிமைப்படுத்தவும் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட மக்களுடைய ஜனநாயக மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கவும் போராட முன்வரவேண்டும் என உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பாப்புலர் பிரன்ட் ஒரு கட்டுக்கோப்பான செயல்வீரர்கள் கொண்ட இயக்கம் எனவே சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழக்கூடிய செயல்வீரர்களை வார்த்தெடுப்பதில், ஒழுக்கம் கட்டுப்பாடு ஆகிய நற்பண்புகளை அவர்களிடையே வளர்ப்பதில் பாப்புலர் பிரண்டின் அனைத்து மட்டத்திலுள்ள தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார் .

சமூக சீர்திருத்தத்தையும் அரசியல் முன்னேற்றத்தையும் வெறுக்கும் சக்திகள், குழுக்கள் பொய் பிரச்சாரத்தின் மூலம் இயக்கத்தின் கண்ணியத்தை, மரியாதையை குலைக்க முயற்சித்து வருவதாக எச்சரிக்கை விடுத்தார்
அதன் பிறகு பாப்புலர் பிரண்டின் தேசிய பொது செயலாளர் கே எம் ஷெரிப் அவர்கள் ஆண்டறிக்கையை சமர்பித்தார் .

அறிக்கையில் , பரவலாக அனைத்து பகுதிகளிலும் உறுப்பினர்களின் சேர்க்கை நடைபெற்று உறுப்பினர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்துள்ளது என்றும் குறிப்பாக தென்னிந்தியாவில் நல்ல வளர்ச்சி யடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .

சமூக பொருளாதார அரசியல் சூழல் குறித்த விவாதம் பொதுக்குழுவில் நடைபெற்றது . இயக்கத்தின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றிய மீளாய்வும் வருங்காலத்தில் செய்யவேண்டிய முன்னெடுத்து செல்ல வேண்டிய அம்சங்கள் குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டது
அதனை தொடர்ந்து இரண்டண்டுகால பதவிக்கான தேசிய செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது . தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கூடி புதிய தேசிய தலைவர்களை நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர் .

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவரம் பின் வருமாறு
  • சேர்மன் : இ எம் அப்துர் ரஹிமான்
  • துணைத்தலைவர் : முஹம்மத் அலி ஜின்னா
  • பொது செயலாளர் : கே எம் ஷெரிப்
  • செயலாளர் : யாசிர் ஹசன்
  • பொருளாளர் : கே பி முஹம்மத் ஷெரிப்

தேசிய பொதுக்குழு கீழ்கண்ட தலைப்புகளில் ஆறு விதமான தீர்மானங்கள் நிறைவேற்றியது .

  • பொதுவாழ்வில் ஊழல்
  • பீகார் தேர்தல் தரும் படிப்பினை
  • பொய் பிரசாரம் மற்றும் ஊடுருவல் பற்றிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
  • இடது சாரிகள் வலதுசாரிகளானது
  • அப்பாவி சிறைவாசிகள் விடுதலை
  • நீதி தேடும் பாபரி மஸ்ஜித்

இறுதியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சேர்மன் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் . சேர்மனுடைய இறுதி உரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது .

பல்வேறு மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 150 பிதிநிதிகள் கலந்து கொண்ட பொதுக்குழுக்கூட்டம் மூன்று நாட்கள் நடைபெற்றது , இதில் பல்வேறு இந்தியா மொழிகளில் உறுப்பினர்கள் கலாசார நிகழ்சிகளை நடத்தி திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஊடக தொடர்பாளர்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
தேசிய தலைமை
பெங்களூர்

Related

SDPI 6257397717052203633

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item