6 மணி நேரத்திற்குள் புதிய இணையதள முகவரியில் விக்கிலீக்ஸ்

அமெரிக்காவின் நிர்பந்தம் மூலம் உருவான நடவடிக்கைகளையும், ஹேக்கர்களின் தாக்குதல்களையும் எதிர்கொண்ட விக்கிலீக்ஸ் 6 மணிநேரத்திற்கு பிறகு புதிய இணையதள முகவரியில் செயல்படத் துவங்கியுள்ளது.

EveryDNS.net விக்கிலீக்ஸ் டொமைனை நீக்கியதைத் தொடர்ந்து விக்கிலீக்ஸ் இணையதளம் 6 மணி நேரம் முடக்கப்பட்டது. ஆனால், இணையதளத்தை சுவிட்சர்லாந்திற்கு மாற்றி பதிலடிக் கொடுத்த விக்கிலீக்ஸ் புதிய இணையதள முகவரியில் செயல்பட துவங்கியுள்ளது. அதாவது wikileaks.ch என்ற பெயரில் செயல்படத் துவங்கியுள்ளது.

விக்கிலீக்ஸ் தொடர்ந்து ஹேக்கர்களின் தாக்குதலுக்கு ஆளாகுவதால் அது இதர இணையதளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நியாயம் கூறி எவரிடிஎன்எஸ் விக்கிலீக்ஸ் இணையதளத்தை நீக்கியுள்ளது.

எவரிடிஎன்எஸ்ஸுக்கு 5 லட்சம் இணையதளங்கள் உள்ளன. ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் இதனை உறுதிச் செய்துள்ளது விக்கிலீக்ஸ்.

தாக்குதல் காரணம் கூறிய எவரிடிஎன்எஸ் டாட் நெட் விக்கிலீக்ஸ் டாட் ஆர்கினை கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால், விக்கிலீக்ஸ் மீதான தாக்குதல்கள் எங்கிருந்து ஏற்படுகின்றது என்பதுக் குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.

அமெரிக்க தூதரக கம்பிவடத் தகவல்கள் வெளியிடுவதற்கு சற்றுமுன்பு இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக விக்கிலீக்ஸின் ஸ்வீடன் நாட்டு சர்வர் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் தலையீட்டால் விக்கிலீக்ஸிற்கு சேவை அளித்துவந்த அமேசான் டாட் காமும் புதன்கிழமை விக்கிலீக்ஸ் இணையதளத்தை நீக்கியிருந்தது.

செய்தி:தேஜஸ் - Koothanallur

Related

wikileaks 3332931690357222923

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item