இஸ்ரேலிற்கு எதிராக போராடுவதற்காக தேசிய ஐக்கியத்திற்கு தயார்: ஹானிய்யா

ஆக்கிரமிப்பை தொடரும் இஸ்ரேலுக்கு எதிராக போராடுவதற்கு தேசிய அளவில் ஐக்கியம் உருவாக்க தயார் என ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான இஸ்மாயீல் ஹானிய்யா தெரிவித்துள்ளார்.

ஹமாஸின் 23-வது ஆண்டு விழாவை முன்னிட்டு காஸ்ஸா நகரில் நடந்த பேரணியில் உரையாற்றினார் அவர். ஃபலஸ்தீனில் ஹமாஸின் கட்டுப்பாட்டிலுள்ள காஸ்ஸாவும், ஃபத்ஹ் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள மேற்கு கரையும் வேறுபட்டு நிற்கின்றன.

2007 ஆம் ஆண்டு நடந்த மத்தியஸ்த முயற்சிகளை வீணாக்கிவிட்டு இரு அமைப்புகளும் வீதியில் இறங்கி மோதலில் ஈடுபட்டன. இந்நிலையில் ஹமாஸின் பேரணியில் கலந்துக்கொண்டு பேசிய ஹானிய்யா, ஆக்கிரமிப்பிற்கு எதிரான தேசிய ஐக்கியம் உருவாகவேண்டும் எனவும், ஹமாஸ் அதற்கு என்றைக்கும் தயார் எனவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.

இஸ்ரேலை நாங்கள் அங்கீகரிக்க தயார் இல்லை. இஸ்ரேலை அங்கீகரிக்கும் பி.எல்.ஓ வின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் வரலாற்று ரீதியான முட்டாள் தனத்தை மேற்கொண்டுள்ளார்.

ஃபலஸ்தீன் நிலத்தின் மீது இஸ்ரேலுக்கு எவ்வித உரிமையுமில்லை. ஹானிய்யா உறுதிபட கூறினார்.

ஃபலஸ்தீன் பிராந்தியத்தில் சட்டத்திற்கு புறம்பான குடியேற்றங்களை கட்டுவதை நிறுத்த சர்வதேச சமூகம் வலியுறுத்திய பொழுதும் இஸ்ரேல் தொடர்ந்து அதனை மீறிவருகிறது.

இஸ்ரேலுடன் அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் அப்பாஸின் நோக்கம் வெற்றிப் பெறாது என ஏற்கனவே ஹமாஸ் அறிவித்திருந்தது.

செய்தி:தேஜஸ்

Related

Palestine 6322045462364493345

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item