வாரணாசி குண்டுவெடிப்பு: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு நிகழ்வின் நினைவு தினத்திற்கு மறுநாள் வாரணாசியில் நடந்த குண்டுவெடிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்களுக்கிடையே பீதியை உருவாக்குவதையும், மத நல்லிணக்கத்தை தகர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட அறிவற்ற, வெட்கக்கேடான செயல் என பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயலகம் கண்டனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதியைத் தேடி மக்கள் ஒன்றிணைந்து நடத்தும் போராட்டத்தை சீர்குலைப்பதும் இத்தகைய செயல்களின் நோக்கமாகும்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என எவ்வித தீர்மானத்தையும் எடுப்பதற்கு பதிலாக முன் காலங்களில் இந்திய தேசத்தை நடுக்கிய குண்டுவெடிப்புகள் தொடர்பாக நடந்த புலனாய்வு முடிவுகளிலிருந்து பாடம் படித்து அனைத்து வாய்ப்புகளையும் குறித்து கவனத்தில் கொண்டு விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென புலனாய்வு ஏஜன்சிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

செயலகத்தின் அறிக்கையை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷெரீஃப் வெளியிட்டுள்ளார்.

செய்தி:தேஜஸ்

Related

SDPI 2592050620171282520

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item