அப்ஸல் குரு வாக்கு வங்கி அரசியலின் இரை - SDPI

அப்ஸல் குருவை தூக்கிலிட்ட நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சோசியல் டொமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: வாக்கு அரசியல் மற்றும் அரசியல் விளையாட்டில் அப்ஸல் குரு பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளார்.

அவரை தூக்கிலிட்டதன் மூலம் தேர்தலை முன்னரே நடத்தி ஹிந்துத்துவா வாக்குகளை பெறுவதற்கு காங்கிரஸ் முயற்சிக்கிறது. தனது கருத்தை தெரிவிக்க கூட அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. பொது சமூகத்தின் மனசாட்சியை திருப்திப்படுத்த மரணத்தண்டனையை உறுதி செய்வதாக உச்சநீதிமன்றம் கூறியது. அப்ஸல் குருவுக்காக அவரது மனைவி தபஸ்ஸும் அளித்த கருணை மனுவை தள்ளுபடி செய்த விபரம் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை.

சர்வதேச அளவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் இந்தியா தனது சொந்த குடிமகனின் தனது தரப்பு நியாயத்தை கூறக்கூட வாய்ப்பளிக்காமல் தூக்கிலிட்டுள்ளது. இந்த சூழலில் மரண தண்டனையை இந்தியாவில் ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு இ.அபூபக்கர் கூறியுள்ளார்.

Related

முக்கியமானவை 8664859695811319252

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item