அப்ஸல் குரு மரணத் தண்டனை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பஜ்ரங்தள், RSS தாக்குதல்

நேற்று காலை 11 மணியளவில் கஷ்மீர் மாணவர்களும், NCHRO, PUDR போன்ற மனித உரிமை அமைப்புகளும் ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அப்பொழுது போலீஸ் உதவியுடன் பஜ்ரங்தள் வெறியர்கள் ஆக்ரோஷத்துடன் அவர்களை தாக்கினர்.
பஜ்ரங்தள், RSS, VHP வெறியர்களை தடுப்பதற்கு பதிலாக அவர்களை சமாதானப்படுத்தினர். போலீஸ் ஒன்றும் செய்யாத என்பதை புரிந்து கொண்ட சங்க்பரிவார தீவிரவாதிகள் கூடுதல் ஆவேசத்துடன் போராட்டக்காரர்களை தாக்கினர். இளம்பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டும் போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பஜ்ரங்தள் தீவிரவாதிகள் கஷ்மீர் இளம்பெண்களிடம் தவறாக நடக்க முயன்றனர். போராட்டம் நடத்தியவர்கள் மீது பாட்டில் மற்றும் செருப்புக்களை வீசினர்.
தாக்குதல் நடத்திய சங்க்பரிவார கயவர்களை கைது செய்வதற்கு பதிலாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்களை பிடித்து இழுத்து வேனில் ஏற்றிச் சென்றது போலீஸ்.