அப்பாவி அப்சல் குருவை தூக்கிலிட்ட பயங்கரவாத காங்கிரஸ் அரசு

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கூட்டு இந்துத்துவா மனசாட்சியின் படி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி கஷ்மீர் இளைஞர் அப்சல் குருவை இன்று காலை 8:00 மணியளவில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தூக்கிலிட்டு படுகொலைச் செய்துள்ளது.

அப்சல் பிறந்த மாநிலமான கஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி பாராளுமன்ற தாக்குதலில் சதியாலோசனை நடத்தியதாக குற்றம் சாட்டி 2002 டிசம்பர் 18-ஆம் தேதி அப்சல் குருவிற்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. இது 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி உயர்நீதிமன்றமும், 2005 ஆகஸ்ட் நான்காம் தேதி உச்சநீதிமன்றமும் உறுதிச் செய்தது. 2006 அக்டோபர் 20-ஆம் தேதி திஹார் சிறையில் மரணத்தண்டனையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டது.

குடியரசு தலைவருக்கு அளிக்கப்பட்ட கருணை மனு 2 வாரத்திற்கு முன்பு தள்ளுபடிச் செய்யப்பட்டது. ஒரு அப்பாவியின் உயிரை காவு வாங்கிய இந்திய அரசு, மனித உரிமையை உச்சக்கட்டமாக மீறியுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் கண்டனம்

அஃப்சல் குரு தூக்கு சட்டத்தின் அடிப்படையில் இல்லை, அரசியல் உள்நோக்கம் கொண்டது - பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர்

2001 , டிசம்பர் 13 அன்று நடைபெற்ற பாராளுமன்ற தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட அஃப்சல் குருவுக்கு இன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது .

இது குறித்து கருத்து தெரிவித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ .எஸ்.இஸ்மாயீல் அவர்கள் , " அஃப்சல் குரு விஷயத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் இல்லை என்றும் இன்று அதிகாலை அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனை அரசியல் உள்நோக்கம் கொண்டது " என்றார்.

தமுமுக கண்டனம்

அப்சல் குருவுக்கு கூட்டு மனசாட்சிப்படி தூக்குத்தண்டனை தமுமுக கண்டனம்.

அப்சல் குரு விவகாரத்தில் நேரடியான சாட்சியம் இல்லாத நிலையில் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் அப்சல் குருவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ள தூக்குத்தண்டனை கண்டிக்கத்தக்கது:

இந்திய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக இந்திய உச்சநீதிமன்றத்தினால் கூட்டு மனசாட்சி என தீர்ப்பின்படி அப்சல் குரு இன்று அதிகாலை தூக்கில் இடப்பட்டுள்ளார். எந்த நேரடி சாட்சியமும் இல்லாத நிலையில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் அன்று உச்சநீதிமன்றம் அப்சல் குருவுக்கு எந்த பயங்கரவாத குழு அல்லது அமைப்பை சேர்ந்தவர் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.

அப்சல் குருவுக்காக வாதாட நியமிக்கப்பட்ட வக்கீல் மிக முக்கியமான சாட்சியங்களைக்கூட குறுக்கு விசாரணை செய்யவில்லை என்ற தகவல்கள் வெளிவந்தன. நாடாளுமன்றம் தாக்கப்பட்டது கடுமையான கண்டனத்துக்குரியது என்பதிலும் அது எந்த விதத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாத அக்கிரம செயல் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை ஆனால் அந்த கொடிய குற்றம் குறித்த விசாரணைகள் தீர்ப்புகள் வழங்கப்பட்ட வழிமுறையின் மீது பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் பிடிபடவில்லை தண்டனையும் வழங்கப்படவில்லை இந்நிலையில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்படாத தாக்குதலில் ஈடுபடாத சதிசெயலில் ஈடுபட்டதாக நிருப்பிக்கப்படாத அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனை நியாயமற்றது.

அப்சல் குரு தூக்கிலிடபட்டதன் மூலம் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கும் நோக்கமும் நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களுக்கும் உண்மையான கரணம் யார் எது என நடவடிக்கையும் புறம் தள்ளப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அப்சல் குரு மீது நேரடியான, மறைமுகமான எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் இந்திய மக்களின் கூட்டு மனசாட்சியை திருப்தி படுத்தவே இவருக்கு தூக்கு என்பது, நீதிக்கு ஆதாரம் தேவை இல்லை, இவன் குற்றம் செய்தான் என்று நம்பினாலே போதும் என்பது ஆபத்தானது, இது இந்திய அரசியல் சாசனத்தினை குழிதோண்டி புதைக்கும் செயல் என்பதில் சந்தேகம் இல்லை என்று J.S.ரிபாயீ கண்டனம் தெரிவித்தார்.
 

Related

முக்கியமானவை 4811837217817595371

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item