அப்சல் குரு தூக்குத்தண்டனையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தினால் கூட்டு மனசாட்சி என்ற தீர்ப்பின்படி அப்சல் குரு தூக்கில் இடப்பட்டுள்ளார். எந்த நேரடி சாட்சியமும் இல்லாத நிலையில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் அன்று உச்சநீதிமன்றம் அப்சல் குரு எந்த பயங்கரவாதக் குழு அல்லது அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.

அப்சல் குருவுக்காக வாதாட நியமிக்கப்பட்ட வக்கீல் மிக முக்கியமான சாட்சியங்களைக்கூட குறுக்கு விசாரணை செய்யவில்லை என்ற தகவல்கள் வெளிவந்தன. நாடாளுமன்றம் தாக்கப்பட்டது கடுமையான கண்டனத்துக்குரியது என்பதிலும் அது எந்த விதத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாத அக்கிரமச் செயல் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அந்தக் கொடிய குற்றம் குறித்த விசாரணைகள் தீர்ப்புகள் வழங்கப்பட்ட வழிமுறையின் மீது பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

நாடாளுமன்றக் தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகள் பிடிபடவில்லை, தண்டனையும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்படாத தாக்குதலில் ஈடுபடாத சதிச்செயலில் ஈடுபட்டதாக நிரூப்பிக்கப்படாத அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட பாரபட்சமான தூக்குத்தண்டனை நியாயமற்றது, சட்டவிதிமுறைகளுக்கு அப்பாற்ப்பட்டு மக்களின் கூட்டுமனசாட்சியின் படி தூக்குதண்டனை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்பை சட்டவல்லுனர்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும், விமர்சனம் செய்திருந்த நிலையில் மத்திய அரசு தூக்குத்தண்டனை நிறைவேற்றியிருப்பது பாரபட்சமான நடவடிக்கை, எனவே மத்திய அரசைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச தண்டனையான தூக்குதண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று சென்னையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது தலைமையில் நடைபெரும் ஆர்பாட்டத்தில் பேரா.M.H.ஜவாஹிருல்லா MLA (மனிதநேய மக்கள் கட்சி), பழ. நெடுமாறன் (தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு), தொல். திருமாவளன் எம்.பி, (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள்), மல்லை சத்யா (துணை பொதுச் செயலாளர் மதிமுக), விடுதலை இராஜேந்திரன் (பொதுச் செயலாளர், திவிக), அப்துல் ஹமீது (SDPI), தியாகு (தமிழர் தேசிய விடுதலை இயக்கம்), திருமுருகன் (மே-17 இயக்கம்) அற்புதம்மாள் (பேரரிவாளனின் தாயார்) செந்தில் (SAVE TAMIL) செல்வராஜ் (மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்), சீனிவாசன் (பூவுலகின் நண்பர்கள்), உள்ளிட்ட தலைவர்களும் தென் சென்னை மாவட்ட தமுமுக தலைவர் சீனிமுஹம்மது, செயலாளர் ஹனிபா, பொருளாளர் மகதும் நாசர் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.

Related

இந்தியா ஃபலஸ்தீனுக்கு ஆதரவளிக்கவேண்டும் – காலித் மிஷ்அல்!

ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திலும், அணிசேரா கொள்கையிலும் மகத்தான பாரம்பரியத்தைக் கொண்ட இந்தியா, இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஹமா...

டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கடந்த 6ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புதுடெல்லியிலுள்ள இஸ்லாமிய‌ கலாச்சார மையத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல அரசியல் கட்சி தலைவர்கள், இஸ்லா...

PFI, SDPI-க்கு எதிரான RSS-CPM பத்திரிகைகளின் சூழ்ச்சி தோல்வி!

சர்வதேச சந்தையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பு வரும் ப்ரவுன் சுகர் என்ற போதைப் பொருளுடன் கைதான நபருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ க்கும் தொடர்பு இருப்பதாக அவதூறான செய்தியை வெளியிட்ட ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item