ஹைதராபாத்தில் குண்டு வைத்தவர்கள் : ராஜு, விஜய்?

ஹைதராபாதின் "தில்சுக் நகர்" குண்டுவெடிப்பில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில், தலைமறைவாகியுள்ள ராஜு மற்றும் விஜய் ஆகியோர் குறித்து விசாரிப்பதில் "அக்கறை" காட்டாத போலீஸ், முஸ்லிம்களை சிக்கவைப்பதில் தான் "முனைப்பு" காட்டிவருகிறது.

குண்டுவெடித்த தில்சுக் நகரின் ஹோட்டல் ஒன்றில் "தவறான விலாசத்தை கொடுத்து 10 நாட்களாக தங்கியிருந்த ராஜு, விஜய் உள்ளிட்ட 5 நபர்கள், குண்டுவெடித்தபின்பு, ஹோட்டலுக்கு திரும்பவில்லை. தனியாருக்கு சொந்தமான, அந்த ஹோட்டலில் 2 அறைகள் எடுத்து தங்கியிருந்த இவர்கள், எப்போது வெளியே சென்றாலும் சேர்ந்தே செல்லும் வழக்கமுடையவர்களாக இருந்துள்ளனர். ஹோட்டலில் பொருத்தப்பட்டுள்ள "கண்காணிப்பு கேமரா" பதிவுகளின்படி, இவர்கள் எப்போதும் ஒன்றாகவே வெளியே செல்வதும் - ஒன்றாகவே திரும்புவதும்,தெரியவந்தது. குண்டுவெடிப்பு நடந்த, அந்த நேரத்தில் மட்டும் இருவர் ரூமிலேயே இருந்துள்ளனர். குண்டுவெடித்த சற்று நேரத்துக்குள்ளாகவே, அவர்களும் ஹோட்டலைவிட்டு வெளியேறியுள்ளனர். ஹோட்டலில், இவர்கள் கொடுத்திருந்த "அட்ரெஸ்" போலியானது, என தெரியவந்துள்ளது.

மேலும், ஹோட்டல் அறைகளை பதிவு செய்வதற்கு, இவர்கள் கொடுத்திருந்த "அடையாள அட்டை"யும் போலியானது. போலி அடையாள அட்டையில், ஆந்திர மாநிலம் "நல்கோடா மாவட்ட" விலாசம் வழங்கப்பட்டுள்ளது. "சுப்ஹானி" என்ற முஸ்லிம் பெயரில் அந்த அடையாள அட்டை பெறப்பட்டுள்ளது. இத்தனை தெளிவான துப்பு கிடைத்திருந்தும், இவர்களை பற்றிய விசாரணையில் இறங்காமல், முஸ்லிம்களையே குறிவைத்து, கைது படலத்தை அரங்கேற்றிவரும் காவல்துறை, இதுவரை 80க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களை சட்டவிரோத காவலில் வைத்து விசாரித்து வருகிறது. 42,436 தொலைபேசி உரையாடல்களை "ஆய்வு" செய்து வருவதாக கூறும் உளவுத்துறை, அதில் 5 அழைப்புகள் "காஷ்மீரிலிருந்து" வந்ததாக கூறுகின்றனர். அதிலும், 3 "சிம்"கார்டுகள் ஹைதராபாத்தில் பெறப்பட்டதாக "பீதி"யை கிளப்புகின்றனர். ஆக, இந்த குண்டுவெடிப்பை அப்சல் குருவோடு இணைத்து, வழக்கை முடிவுக்கு கொண்டுவர "திட்டம்" போட்டுவிட்டனர்.

Related

முக்கியமானவை 2581593317683438951

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item