தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் கொண்டாடப்பட்டது

வகுப்புவாத பாசிசம், ஏகாதிபத்திய பயங்கரவாதம், சமூக அநீதி ஆகியவற்றிற்கு எதிராக பெங்களூர் திப்புசுல்தான் நகரில் இருந்து நவீன சமூக சக்திப்படுத்துதலின் ஒளி விளக்காக ஜொலித்து புதிய இந்தியாவிற்கான புதிய பயணத்தை துவக்கிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்கள் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்திற்கான உறுதிமொழியை புதுப்பிக்கும் விதமாக நேற்று (பிப்ரவரி 17) பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை கடைப்பிடித்தது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும், தமிழகத்தில் 3 இடங்களிலும், கேரளாவில் 14 இடங்களிலும் கர்நாடாகா மாநிலத்திலும், இந்தியாவின் இன்னும் பல மாநிலங்களிலும் உரிமை போராட்டத்தின் முழக்கங்களை எழுப்பி யூனிட்டி மார்ச், பேரணி,பொதுக்கூட்டங்கள் நடந்தேறின.

2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி பெங்களூரில் நடந்த எம்பவர் இந்தியா மாநாடு மக்கள் போராட்டத்திற்கான புதிய வழிகாட்டுதலையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியது.அவ்வேளையில் மக்கள் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்திற்காக நவீன சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,இந்திய தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சமூக மேம்பாட்டு பணிகள், வகுப்புவாத-ஏகாதிபத்திய-அரசு தீவிரவாதங்களுக்கு எதிரான பிரச்சாரங்களின் வாயிலாக தேசிய நீரோட்டத்தில் இடம் பிடித்த நேசனல் டெவலப்மெண்ட் ஃப்ரண்ட்(NDF),கர்நாடகா ஃபாரம் ஃபார் டிக்னிடி(KFD), மனித நீதிப் பாசறை(MNP) ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து பாப்புலர் ஃப்ரண்ட் உருவெடுத்தது.

உரிமைகள் மறுக்கப்பட்டு வரலாற்றில் ஓரத்தில் ஒதுக்கப்பட்ட மக்கள் சமூகம் சக்திப்படுத்துதல் என்ற பிரகடத்திற்கு சாட்சியம் வகிக்க பெங்களூர் திப்புசுல்தான் மைதானத்திடலில் சங்கமித்த 2007 பிப்ரவரி 17-ஆம் நாள் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் வாழ்வில் மீள் எழுச்சியை ஏற்படுத்தியது.

குற்றச்சாட்டுக்கள்,அவதூறுகளை எழுப்பி முஸ்லிம்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் சமூக, அரசியல் களங்களின் தேசிய நீரோட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தி தனிமைப்ப்படுத்துவதன் மூலம் அவர்களின் உரிமைகளை மறுத்து வரும் அரசியல் கட்சிகள், ஊடகங்கள், அரசுகளின் சூழ்ச்சிகளுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்படுத்தி வருகிறது.

மக்கள் போராட்டங்களுக்கு புதிய வழிகாட்டுதலை வழங்கி உயர்ந்த லட்சியத்தை போதித்து ‘The new India equals rights for all’ என்ற அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கு இந்தியா என்ற இந்தியாவை கட்டியெழுப்பி சிறுபான்மை- ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வரலாற்றுரீதியான பங்களிப்பை உறுதிச் செய்யும் முழக்கங்களை தனது பயணத்தி துவக்கத்திலேயே பாப்புலர் ஃப்ரண்ட் முழங்கியது.

ஆனால்,அவதூறு பிரச்சாரங்கள், குற்றச்சாட்டுக்கள் மூலம் இவ்வியக்கத்தை முடக்க தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அரசும், போலீசும், ஊடகங்களில் ஒரு பிரிவினரும் முயற்சி செய்து வருகின்றனர். அவ்வப்போது இந்தியாவில் நடக்கும் சில அசம்பாவித சம்பங்களில் பாப்புலர் ஃப்ரண்டை சிக்கவைத்து, அதன் புகழை கெடுக்க சில ஊடகங்களும், உளவுத்துறை ஏஜன்சிகளும் கட்டுக்கதைகளை பரப்பினர். மாராடு வழக்கு, நெல்லிக்குப்பம் சம்பவம், கோவையை குண்டுவைத்து தகர்க்க சதி என்ற ரத்னசபாபதியின் நாடகம், லவ் ஜிஹாத், முவாற்றுப்புழா கைவெட்டு சம்பவம், கஷ்மீர் ரிக்ரூட்மெண்ட் வழக்கு என பாப்புலர் ஃப்ரண்டை ஒடுக்குவதற்கான முயற்சியில் அவதூறுகளை அள்ளிவீசியபோது பாப்புலர் ஃப்ரண்ட் அத்தகைய சூறாவளிகளில் தகர்ந்து போகாமல் இறைவனின் மாபெரும் உதவியால் மக்கள் போராட்டத்திற்கான தனது பாதையில் தொடர்ந்து பயணித்து வருகிறது.

அதேவேளையில் அவதூறுகளின் உண்மை பின்னணி வெளியான பிறகும் அரசும், அதிகார வர்க்கமும் தம்மை திருத்திக்கொள்ள தயாராகவில்லை என்பதையே சுதந்திர அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்த பாப்புலர் ஃப்ரண்டிற்கு தடை விதித்த சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஆனால், சங்க்பரிவார பாசிச சக்திகளுக்கு சுதந்திர தினம், குடியரசு தினங்களில் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் அணிவகுப்பை நடத்த அரசு தாராளமாக அனுமதி வழங்கியது.

பாப்புலர் ஃப்ரண்ட் எவ்வேளையிலும் சீருடை அணிந்து அணிவகுப்பை நடத்தக்கூடாது என்பதற்காக தமிழகத்தின் ஜெயலலிதா அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது. அதே வேளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க போன்ற கட்சியினர் சீருடை அணிந்து அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் கூட கேரள மாநிலம் கண்ணூரில் அணிவகுப்பு, பேரணி நடத்த போலீஸ் தடைவிதித்துள்ளது. தமிழகத்தின் திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் பேரணி,பொதுக் கூட்டம் நடப்பதை தடுக்க போலீஸ் பல்வேறு முயற்சிகளை கையாண்டது.

ஆனால், அனைவரது அவதூறுகளையும் பொய்ப்பிக்கும் விதமாக இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் அமைதியாக கடைப்பிடிக்கப்பட்டது. கட்டுப்பாடு மிக்க பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்கள் கேரளா, கர்நாடகாவில் மிடுக்குடன் அணிவகுத்துச் சென்று தமது போராட்ட வீரியத்தை பறைசாற்றினர்.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் பாசிச, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் மற்றும் மக்கள் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் எவ்வித சமரசமும் இல்லை என்பதை திட உறுதியுடன் எடுத்தியம்பியது.































Related

முக்கியமானவை 8354269316022668668

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item