முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜவாஹிருல்லாஹ் MLA

விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று 24 இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார். விஸ்வரூபம் படம், சட்டம் – ஒழுங்குப் பிரச்னையின் காரணமாகவே தடை செய்யப்பட்டது. இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறினார்.

இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கமான உடன்பாடு ஏற்பட்டால் படத்தை வெளியிட அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் வியாழக்கிழமை 24 இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன்பின் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியது: விஸ்வரூபம் படம் பிரச்னையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு கூறியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் பேச்சுவார்த்தை முத்தரப்பு பேச்சுவார்த்தையாக அமைய வேண்டும். அரசு ஒரு தரப்பாகும், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தோர் ஒரு தரப்பாகவும், கமல் ஒரு தரப்பாகவும் இருந்து பேச வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். விஸ்வரூபம் பிரச்னையை அரசியல் ஆக்க வேண்டாம் என்று ஜெயலலிதா கூறியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். கமல்ஹாசன் இதுவரை எங்களுடன் பேச எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஹாரூண் கமல்ஹாசனைஸ் சந்தித்துப் பேசியதற்கும், 24 முஸ்லிம் அமைப்புகளுக்கும் எந்தஸ் சம்பந்தமும் இல்லை.

இந்தப் பிரச்னையை எப்படி அணுகலாம் என்பது பற்றி நாங்கள் பேசி வருகிறோம். தியேட்டர்களில் நடந்த வன்முறையில் எங்களுக்கு தொடர்பு இல்லை. பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெறும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.

Related

முக்கியமானவை 2838763602618719310

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item