பாப்புலர் ஃப்ரண்ட் தினம் : பத்திரிகையாளர் சந்திப்பு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக இந்தியா முழுவதும் கடைபிடிக்கவுள்ளது. இந்தியாவில் நடந்த சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது காலடித்தடங்களை பதித்து வருகின்றது.

நமது இந்திய நாட்டைஇந்துத்துவ ஃபாசிஸ சக்திகள் இனவாதத்தின் அடிப்படையில் பிரிக்கும் முயற்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட நிலையிலும், ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகள் வளர்ச்சியின் பெயரால் அமல்படுத்தப்பட்ட நிலையிலும், சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளாகியும் முன்னேறாத சமூகங்களாகவே முஸ்லிம்கள், தலித்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என தொடரும் சூழ்நிலையில்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னுடைய பயணத்தை தொடங்கியது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் காஞ்சிபுரம், திருச்சி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் "Unity March" என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரம்

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 14.02.2013 அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரத்தில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.  இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில துணைத்தலைவர் ஷேக் முஹம்மது அன்சாரி கலந்து கொண்டு நிகழ்ச்சியின் சாரம்சத்தை விளக்கினார்.

கன்னியாகுமரி

அந்நிகழ்ச்சி சம்பந்தமாக நாகர்கோவிலில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் முஹம்மது இலியாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

குமரி மாவட்டத்தில் 17 ந்தேதி மாலை 3 மணிக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து பேரணி புறப்படுகிறது. இந்த பேரணி அண்ணா ஸ்டேடியத்தை சென்று அடைந்ததும் அங்கு பொதுக்கூட்டம் நடைபெறும்.

இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசுப், மாநில பொருளாளர் பைசல் அஹமது மற்றும் செயற்குழு உறுப்பினர் அஹமது பக்ருதீன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இப்பத்திரிகையாளர் சந்திப்பின் போது மாநில பொருளாளர் பைசல் அஹமது மற்றும் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ரூஹுல் ஹக் ஆகியோர் உடனிருந்தனர்.

திருச்சி

திருச்சியில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற 17.02.13 அன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.

அந்நிகழ்ச்சி சம்பந்தமாக திருச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொது செயலாளர் A.ஹாலித் முஹம்மது திருச்சி பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி துவங்கி பாலக்கரை வந்தடையும் என்று, அங்கு பொதுக்கூட்டம் நடக்கும் என்று அவர் தெரிவித்தார்.  இப்பத்திரிகையாளர் சந்திப்பின் போது  மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்தீக் மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் S.அமீர் பாஷா ஆகியோர் உடனிருந்தனர் .

Related

முக்கியமானவை 8277008487452519235

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item