MIM அக்பருத்தீன் உவைஸிக்கு ஜாமீன்

உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசினார் என்று கூறி கைது செய்யப்பட்ட மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீனின்(MIM) ஆந்திர சட்டப்பேரவை கட்சித் தலைவர் அக்பருத்தீன் உவைஸிக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது.

உடல்நிலையை கருத்தில் கொண்டு போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும்; தலா ரூ.10 ஆயிரத்துக்கு இரண்டு உறுதி ஆவணங்கள் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் நிஸமாபாதில் உள்ள முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி,

உவைசிக்கு ஜாமீன் வழங்கினார்.

அவரது பேச்சுக்காக அடிலாபாத் நிர்மல் நகரத்திலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், நிர்மல் நகருக்குள் உவைசி நுழையக்கூடாது; பொதுக்கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது, சமுதாய உணர்வுகளைத் தூண்டக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. மறு உத்தரவு வரை தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவேண்டும்; தலா ரூ.25 ஆயிரத்துக்கு இரண்டு உறுதி ஆவணங்கள் அளிக்கவேண்டும் என்றும் அந்த அடிலாபாத் நீதிமன்றம் உவைசியிடம் கூறியது.

அதேவேளையில் வகுப்புக்கலவரத்தை தூண்டி முஸ்லிம்களை கடுமையாக தாக்கி வெறித்தனமாம பேசி வரும் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான பிரவீன் தொகாடியா இதுவரை கைதுச் செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றித்திரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

முக்கியமானவை 2813440170095084590

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item