நரேந்திர மோடிக்கு எதிராக CFI, SIO அமைப்புகள் போராட்டம்
http://koothanallurmuslims.blogspot.com/2013/02/cfi-sio.html
தலைநகர் டெல்லியில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
டெல்லியில் அமைந்துள்ள ஸ்ரீராம் கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களிடையே உரையாற்ற வந்தார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. மோடியின் இந்த வருகையை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடியின் நிகழ்ச்சி நடந்த கல்லூரிக்கு வெளியில் கூடிய மாணவர்கள் மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட இனக் கலவரத்தை மறைக்க மோடி முயல்வதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
போலீசாரின் தடுப்பை மீறி மோடிக்கு கருப்புகொடி காட்ட முயன்ற மாணவர்களை தண்ணீரை பீச்சி அடித்து களைந்து போக செய்தனர். மேலும் தொடர்ந்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
இந்த போராட்டத்தில் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, SIO மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மோடி மூன்றாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் குஜராத் மாநிலத்தின் வெளியில் கலந்துகொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.