விஸ்வரூபம்​ பிரச்சனையி​ல் சுமூக உடன்பாடு – SDPI கட்சி நன்றி

விஸ்வரூபம் பட பிரச்சனையில் சுமூக உடன்பாடு ஏற்பட காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக SDPI கட்சி அறிவித்துள்ளது.

இதுக்குறித்து SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கடந்த இரண்டு வாரங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விஸ்வரூபம் படப் பிரச்சைனை நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்ப்பட்டதை தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது.

இந்த பிரச்சனையில் SDPI கட்சியை உள்ளடக்கிய கூட்டமைப்பு திரு.கமலஹாசனுடன் ஆரம்பம் முதலே பேச்சுவார்த்தை நடத்தியும், சட்ட ரீதியாகவும் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் மிகுந்த நிதானத்துடன் செயல்பட்டது.

உணர்வுகளை தூண்டும் விதத்திலோ வன்முறைகளுக்கு இடமளிக்கும் விதத்திலோ எந்த தருணத்திலும் செயல்படவில்லை.  பிரச்சனை பெரிதாவதற்கு எந்த அரசியல் பின்ணணியும் காரணமுமில்லை. மாறாக திரு.கமலஹாசன் நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றதே இப்பிரச்சனை விஸ்வரூபமடைய காரணமாயிற்று.

முஸ்லிம்களை பொறுத்தவரை,  திரைப்படங்களில் தொடர்ந்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே இந்த போராட்டத்தின் பிரதான காரணம். இந்த பிரச்சனையில் கடைசிவரை முஸ்லிம்கள் நிதானம் காத்து தங்களது சகிப்புத் தன்மையை நிலைநிறுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்தும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கவனத்தில் கொண்டும் தமிழக அரசு எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை.

நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உள்துறைச் செயலாளர் திரு.இராஜகோபால் அவர்கள் நடுநிலையுடனும், சமூக அக்கறையுடனும் செயல்பட்டார். அவரை பாராட்டுகிறேன்.

பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட வேண்டும் எனும் நோக்கோடு கூட்டமைப்பினர் குறைந்தபட்ச கோரிக்கைகளோடுதான் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டோம். திரு.கமலஹாசனிடம் 12 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தொழில்நுட்பக் காரணங்களால் 5 கோரிக்கைகளை செயல்படுத்த சாத்தியமில்லை என அவர் தெரிவித்ததை ஏற்றுக் கொண்டோம். ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளில் ஒன்று திரைப்படத்தின் ஆரம்பத்தில் இத்திரைப்படத்தின் கதை கற்பனையே. எந்த குறிப்பிட்ட சமூகத்திற்கோ, தனி நபருக்கோ  எதிரானதல்ல என குறிப்பிட வேண்டும் என்பதும் ஒன்று.

எந்த அளவிற்கு படக்காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன என்பதை விட இந்த போராட்டம் திரைப்படங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை தவிர்க்கும் அளவிற்கு பெரும் விவாதங்களையும், தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளது  என்பதே உண்மை.

இனிதிரை உலகினர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு சர்ச்சைகளை தவிர்க்கவேண்டும் என SDPI கட்சி கேட்டுக்கொள்கிறது.

மேலும் விஸ்வரூபம்’ பிரச்சனையில் சுமூக உடன்பாடு ஏற்பட, முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்த திரு.கமலஹாசன் அவர்களுக்கும்,ஆரம்பம் முதல் ஒத்த கருத்தோடு போராடிய கூட்டமைப்பின் அனைத்து தலைவர்களுக்கும், சுமூக தீர்வை ஏற்படுத்திய அரசிற்கும், ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் SDPI  கட்சியின் சார்பாக  நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

Related

முக்கியமானவை 8997077987690449880

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item