டெல்லி தேர்தலில் களம் காணும் SDPI

சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இரண்டு பெரும் கட்சிகளான காங்கிரஸும், பா.ஜ.க.வும் தங்கள்  சக்தியைத் தீர்மானிக்க போராடினர். அத்துடன் பல்வேறு கட்சிகள் தங்களது பலத்தை நிரூபிக்க களம் கண்டன.

அதில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் பங்களிப்பையும், அக்கட்சியின் முன்னேறத்தையும் பார்க்கும்போது வரும் காலத்தில் அதன் கிளைகள் விரிந்து பரவி இந்தியா முழுக்க படரும் என்று நாம் நம்பும் அளவிற்கு அதன் வெற்றி அமைந்திருந்தது.

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) 24 சட்டமன்றத் தொகுதிகளில் 3-வது மற்றும் 4-வது இடங்களை தனது போராட்ட அரசியலின் ஒரு கட்டமாக தக்க வைத்துக் கொண்டது. இத்தேர்தலில் பல பலம் பெறும் கட்சிகளும் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர்ச்சியாக வருகிற டெல்லி சட்டமன்றத் தேர்தலை தனது அடுத்த களமாக தேர்ந்தெடுத்திருக்கிறது. கர்நாடகத்தில் கிடைத்த அனுபவத்தோடு அங்கிருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள இந்தியாவின் தலைநகரான டெல்லியின் கிராரி தொகுதில் தங்களது கட்சியின் வேட்பாளராக அப்பகுதியில் தோல் வர்த்தக தொழில் செய்து வரும் ஜாவித் அஹ்லாகியை அறிவித்திருக்கிறது.

வடமேற்கு டெல்லியின் சிறு நகரமான முபாரக்பூரில் மிகச் சிறிய தனது வீட்டில் தங்களது கட்சிக் கொடியின் நடுவே அமைதியாக அமர்ந்திருக்கும் ஜாவித் (45), ஒரு புதிய மாற்றத்திற்காக மக்கள் SDPIயை சார்ந்த தன்னை MLA-வாக தேர்ந்தெடுப்பார்கள் என்ற எண்ணத்தோடு நம்மை சந்தித்தார்.

ஜாவித் கூறியதாவது: எங்களது மிகப் பெரும் திட்டம் வறுமையின் கோரப் பிடியால் கல்வி அறிவில்லாமல் தங்களது வாழ்க்கையை அடிமைகளாக கழிக்கும் குழந்தைகளுக்கு கல்வியை எளிதாக்குவதுதான். கல்வி அறிவில்லாமல் ஒரு சமூகத்தை விழிப்புணர்வுள்ள சமூகமாக கட்டியெழுப்புவது இயலாத காரியம்.

இங்கு மக்கள் சுத்தமற்ற, சுகாதாரமற்ற வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுள்ளனர். இம்மக்களின் வாழ்க்கையை பார்க்கும்போது மனம் பெரும் சுமையைச் சுமப்பது போல் உணர்கிறேன். காரணம், சுத்தமான தண்ணீர் கிடைக்காத, சாக்கடைகள் நிறைந்த ஒரு பகுதியாகவே கிராரி காணப்படுகின்றது. அதன் விளைவு நோய்களை தோற்றுவிக்கும் ஒரு பூமியாக இப்பகுதி மாறியுள்ளது. இந்த நிலையை சரி செய்வது யார்? அந்த மக்களுக்கு சுகாதாரமான வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக் கொடுப்பது யார்? இதற்கான போராட்டத்தை கையில் எடுப்பது யார்? என்று கவலை கொண்ட தருணத்தில், இப்பிரச்னைகளுக்கு தீர்வாக வந்ததுதான் SDPI என்றார்.

தற்பொழுது கிராரி பகுதின் பா.ஜ.க.வின் MLA-வான அனில் ஜா தொகுதியின் மேம்பாட்டிற்காக 630 கோடி செலவிட்டதாகவும், 4200 சாலைகள் கட்டப்பட்டும் அல்லது சீரமைக்கப்பட்டும் உள்ளன பற்றி கேட்டதற்கு இவை அனைத்தும் பொய்யான தோற்றம்தான். அந்த பணம் மண்ணுக்கடியில் புதைக்கப்பட்டதை போன்று உள்ளது.

கிராரி தொகுதியில் வாழும் அதிகமான உழைக்கும் வர்க்கத்தினர் உ.பி. மற்றும் பீகாரிலிருந்து குடியேறியவர்கள். அவர்களது உரிமைகளுக்கு மதிப்பு கொடுப்பதும், அவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி கொடுப்பதும் தங்களது கட்சியின் கடமை.

மேலும் SDPI செயல் வீரர்களைக் கொண்ட ஒரு கட்சி. அவர்களால்தான் களத்தில் இறங்கி வேலை செய்ய முடியும். மக்களின் உணர்வுகளை மதித்து, உரிமைகளை மீட்டுத் தர முடியும் என்று அழுத்தமாக கூறினார்.

கடந்த வரலாறுகளை பார்க்கும் போது டெல்லி காங்கிரசுக்கும், பா.ஜ.க.விற்கும் போட்டி நிலவும் ஒரு பகுதி. மற்ற கட்சிகளுக்கு அத்தனை பெரும்பான்மை இருந்ததில்லை. மேலும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் அங்கே தேர்தல் களத்தில் இருக்கிறது.

மூன்று பெரும் கட்சிகளை எதிர்த்து போட்டியிடுவது பற்றி கேட்ட கேள்விக்கு: கடந்த 5 வருடங்களில் இந்த மக்களோடு மக்களாக நான் வளம் வருகின்றேன். பா.ஜ.க. MLA-வையோ அல்லது மற்ற கட்சிகளின் வேட்பாளர்களையோ நான் பார்த்ததில்லை. அதனால் மக்கள் தீர்ப்பளிப்பார்கள் என்று கூறினார்.

இன்னும் இரண்டு வாரங்களில் கிராரி பகுதி மக்கள் யார் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும். பொறுத்திருந்து பார்ப்போம்.

வலசை ஃபைஸல்

Related

முக்கியமானவை 8048985143040131353

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item