பொதுக்கூட்டத்தில் வெறும் 7 ஆயிரம் பேர்! மோடி ஏமாற்றம்!
http://koothanallurmuslims.blogspot.com/2013/11/7.html
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில் வெறும் 7 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மோடி பொதுக்கூட்ட மேடைக்கு வந்தபோது மைதானம் காலியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள கல்லூரிகளில் இருந்து 2 ஆயிரம் மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் ஒருவாறு சமாளித்து பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்தனர். சத்தர்பூர்ஸா, குணா உள்ளிட்ட இடங்களில் மோடியை வைத்து பா.ஜ.க. நடத்திய பொதுக் கூட்டங்களிலும் ஆட்கள் குறைவாக வருகை தந்தனர்.
சாகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆட்கள் மிகக் குறைவாக இருந்ததால் அத்தொகுதி எம்.பி. பூபேந்திர சிங்கிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தினார் மோடி. இதற்கு பா.ஜ.க. தரப்பில், நிகழ்ச்சி துவங்கும் முன்னர் ஊடகங்கள் செய்திகளை ரிப்போர்ட் செய்வதே காரணம் என்று நியாயம் கூறுகின்றனர்.