இன்று ஹேமந்த் கர்கரே இறந்த நாள் - நவம்பர் 26

உண்மையிலேயே தொலைக்காட்சியில் அந்தக் காட்சியைப் பார்த்தவர்களுக்கு மெய் சிலிர்த்திருக்கும். சிக்கலான நேரங்களில் தமக்கு கீழுள்ளவர்களை அனுப்பி விட்டு தலைவன் பின்னால் இருந்து இயக்குவதுதான் உலக மரபு. வழக்கத்துக்கு மாறாக இந்த வீரத் திருமகன் தானே தீவிரவாதிகளை ஒடுக்க முன்னால் சென்று சதிகாரர்களால் குண்டுக்குபலியாக்கப்பட்டுள்ளார். அவரைக் கொன்றது தீவிரவாதிகளின் குண்டுதானா அல்லது அவரின் எதிரிகளால் இந்த சந்தர்ப்பம் நன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது விசாரணையில் தெரிய வரும்.

மாலேகான் குண்டு வெடிப்பிலும் அதற்கு முன்னும் பின்னும் நடந்த குண்டு வெடிப்புகள் எல்லாவற்றிலும் சங்பரிவாரின் கை இருக்கிறது என்பதை உலகம் அறிய செய்தவர். தான் இந்துவாக இருந்தாலும் தன் நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாமியார்களையும், ஜெனரல் புரோகிதையும் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்.

இதனால் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி போன்றோரின் விமர்சனத்துக்கும் உள்ளானவர். சங் பரிவாரும் இவருக்கு குறி வைத்திருந்தது. தன் முடிவு இதனால் இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானித்து பல கைதுகளை தீவிரமாக செய்த இவர் ஒரு வீரத் திருமகன்தான்.

நாட்டுப் பற்று என்ன என்பதை நாம் இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் இந்த நாட்டுக்கு துரோகம் இழைக்கிறானா! அவனைப் பிடித்துக் கொடுப்பதில் முதல் ஆளாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும். அதே போல் ஒரு இந்து இந்த நாட்டை நிர் மூலமாக்க நினைக்கிறானா! அவனை பிடித்து சட்டத்தின் பிடியில் கொடுப்பதில் முதல் ஆளாக இந்துக்கள் இருக்க வேண்டும். நம்ம ஆள்தானே என்று சற்று கண்டும் காணாமல் இருந்தால் பாதிக்கப் படுவது நமது நாடும் நமது குடும்பமும் நமது உற்றார் உறவினர்களும்தான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

கர்கரேயின் மனைவி நரேந்திர மோடி தர நினைத்து இழப்பீட்டுப் பணத்தை வாங்க மறுத்து விட்டதாக இணையங்களில் பார்த்தேன்.

இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் கர்கரேயின் மதிப்பு மேலும் கூடுகிறது. தனது மனைவியையும் தனது குடும்பத்தையும் அந்த மகான் எந்த அளவு பக்குவப்படுத்தியுள்ளார் என்று நினைக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது.

சில சில்லரைகளுக்காக நாட்டையே நிர்மூலமாக்கத் துணியும் கயவர்களுக்கு மத்தியில் இந்த மகான் நிச்சயம் என் பார்வையில் வீரத்திருமகன்தான்.

மேலும் எங்கு குண்டு வெடித்தாலும் உடன் ஏதாவது ஒரு முஜாஹிதீன் பெயரை வைத்து முஸ்லிம்களை கருவறுப்பதையே தொழிலாக கொண்டது நம் காவல்துறை. தற்போதுதான் ஒரு சில மீடியாக்களும் வலைப்பதிவர்களும் சற்று நிதானித்து பதிவு எழுதுவதாக நினைக்கிறேன்.

இந்த மாற்றத்துக்கு அடிகோலிய அந்த வீரத்திருமகன் ஹேமந்த் கர்கரேயும் மேலும் உயிரிழந்த தியாகிகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான மனித குல விரோதிகள் அழிந்து நாசமாகட்டும் .சமிபத்தில் வந்த ஆரம்பம் படம் கூட இவரின் கதையே பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டது. ஆனால் அரசியல் மற்றும் காவி பயங்கரவாதத்தின் அச்சத்தால் சொல்லவேண்டிய கதையை சொல்லாமேலே கதையை சொதப்பி எடுக்கபட்டது என்பது குறிப்பிட தக்கது.

- ரமிஜ்

Related

முக்கியமானவை 7374908258663007270

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item