மஃதனியை விடுவிக்க மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை!

மூன்று ஆண்டுகளாக அநியாயமாக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி. கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியை விடுதலை செய்ய வேண்டும் என்று டெல்லியில் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தான் செய்த குற்றம் என்னவென்று தெரியாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளின் சின்னமே அப்துல் நாஸர் மஃதனி என்று ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேஷனின் பிரதிநிதி மனீஷா சேத்தி கூறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் போலீஸ் ரிக்கார்டில் எவ்வித குற்றங்களும் செய்ததாக பதிவு செய்யப்படாத 80க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிமி இயக்க உறுப்பினர் என்பதுதான் இவர்கள் மீதான குற்றம் என்று அவர் கூறினார்.

ஜோடிக்கப்பட்ட வழக்குகளின் பெயரால் துன்புறுத்தப்படும் ஆயிரக்கணக்கான நிரபராதிகளில் முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடியினர், கிறிஸ்தவர்கள் ஆகியோர் பெரும்பான்மையானவர்கள் என்று ஃபாதர் ஜோஸ் சேவியர் குற்றம்சாட்டினார்.

நிரபராதிகளை சிறையில் அடைக்க உபயோகிக்கும் யு.ஏ.பி.ஏ. போன்ற கறுப்புச் சட்டங்களுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான எதிர்ப்பு உருவாக வேண்டும் என்று இந்தியன் சோசியல் ஆக்ஷன் ஃபாரம் ஸ்தாபகர் அனில் சவ்தரி கூறினார்.

அரசுகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதன் இரைகள்தாம் அப்துல் நாஸர் மஃதனியை போன்றவர்கள் என்று எலிஸபத் ஃபிலிப் கூறினார்.

Related

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிராக இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு

முஸ்லிம் தலைவர்களிடம் படத்தை திரையிட்டு காட்டிய பிறகே விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட வேண்டும் என்று தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இத...

SP உதயகுமாருக்கு முகுந்தன் C மேனன் விருது - NCHRO

கடந்த ஆண்டிற்கான(2012) முகுந்தன் சி மேனன் விருது கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடக்கும் தீரமிக்க போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் டாக்டர் எஸ்.பி. உதயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம்...

அப்துல் நாஸர் மஃதனி கறுப்புச் சட்டத்தின் பலிகடா!

கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி கறுப்புச் சட்டத்தின் பலிகடா என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் கேரள மாநில தலைவர் நாஸருத்தீன் எழமரம் தெரிவித்துள்ளார்.கர்நாடக...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item