சுன்னி - ஷியா மோதல்: உலக அமைதிக்கு அச்சுறுத்தல்! - ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஷியா மற்றும் சுன்னி முஸ்லிம்கள் இடையிலான மோதல் போக்கு உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“எல்லாத் தரப்பினரும் தமக்கிடையிலான வேறுபாடுகளை மறந்து மதக்குழு வாதத்துக்கு எதிரான சிரியாவின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்” என்றும் வெளியுறவு அமைச்சர் முஹம்மது ஜவாத் ஸாரிப் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சில சுன்னி முஸ்லிம் நாடுகள் ‘அச்சுறுத்தலை உருவாக்கும்’ நாடுகளாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிரியாவில் புரட்சி வெடித்தபோது, அதற்கு மதக்குழுவாதம் காரணமாக இருக்கவில்லை. ஆனால் இப்போது முஸ்லிம் மதக்குழுக்களிடையிலான மோதலாக சிரியா விவகாரம் உருவெடுத்துள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.

ஷியா முஸ்லிம் நாடான ஈரான், சிரியாவின் சர்வாதிகாரி பஷருல் அஸதுக்கு ஆதரவளிக்கிறது.

சிரியாவின் சுன்னி போராளிகள் சவுதி அரேபியா மற்றும் துருக்கி உள்ளிட்ட சுன்னி செல்வாக்கு மிக்க நாடுகளிடமிருந்து ஒத்துழைப்பை பெற்று வருகின்றனர்.

Related

உலகம் 8196170129857106012

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item