மோடிக்கு விசா மறுப்பை நீட்டிக்க அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம்!

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை தலைமையேற்று நடத்திய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுப்பு தெரிவிப்பதை நீட்டிக்கும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கீத் எலிசன், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிட்ஸ் மற்றும் 12-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கொண்டு வந்தனர்.

அதில், “குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா வழங்க கூடாது. இந்தியாவில் சிறுபான்மையினருக்கான மத சுதந்திரம் மற்றும் உரிமைகள் காக்கப்பட வேண்டும். அமெரிக்க-இந்திய நல்லுறவு பேச்சுவார்த்தையின்போது இந்த விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்து வருகிறது. மத சுதந்திரத்திற்கு கேடு உருவாக்கும் அதிகாரப்பூர்வ பதவியில் இருப்பவர்களுக்கு பயண ஆவணங்கள் அளிக்க கூடாது என்ற குடியேற்ற சட்டத்தின் படி அமெரிக்கா இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

மோடியின் விசா தடையை நீக்க பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் அமெரிக்கா சென்று முயற்சிகள் மேற்கொண்டார். மோடியின் விவகாரத்தில் கொள்கையை மாற்றிக் கொள்ள முடியாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹார்ஃப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸை (நாடாளுமன்றம்) பொறுத்தவரை இந்தியாவில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அனைத்து இந்தியர்களுக்கும் அவர்களுடைய மதத்தை பின்பற்றி வாழ சுதந்திரம் உண்டு.

பல்வேறு சமூகங்களிடையே இணக்கத்தை விரும்பும் தலைவரையே அமெரிக்கா விரும்புகிறது. மாறாக, பிரிவினையை உருவாக்கும் நபரை அல்ல என்று கூறும் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம், இந்தியாவின் மாறுபட்ட மதசார்பற்ற குணத்தையும், சகிப்புத் தன்மையையும் பாராட்டுகிறது.

குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை விரும்புகிறோம் என்று தெளிவுபடுத்திய தீர்மானம், குஜராத் இனப்படுகொலையில் நரேந்திர மோடியின் பங்கினைக் குறித்தும் விமர்சிக்கிறது.

Related

முக்கியமானவை 3018507305904904460

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item